
மாங்காய் வேப்பம்பூப் பச்சடி
தேவையான பொருட்கள்:
மாங்காய் – ஒன்று வேப்பம்பூ (காய்ந்தது) – ஒரு கைப்பிடி அளவு,
பொடித்த வெல்லம் – 100 கிராம் மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
பச்சை மிளகாய் – ஒன்று
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
தாளிக்க:
கடுகு – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.
செய்முறை: மாங்காயைத் தோல் சீவி நறுக்கி, மஞ்சள்தூள் சேர்த்துக் குழைவாக வேகவிடவும். தேங்காய், பச்சை மிளகாயைச் சிறிதளவு தண்ணீர்விட்டு அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து, வேப்பம்பூவைச் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு வேகவைத்த மாங்காயுடன் தாளித்த கடுகு – வேப்பம்பூவைச் சேர்க்கவும். அரைத்த தேங்காய் விழுதை இதனுடன் சேர்க்கவும். பொடித்த வெல்லத்தையும் சேர்த்து, உப்பு போட்டு கொதிக்கவிட்டு இறக்கவும்.
குறிப்பு: வாழ்க்கையில் கசப்பு, இனிப்பு என்று எல்லாமே இருக்கும். இதை உணர்த்த கசப்பு, இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, உப்பு, காரம் சேர்த்து இந்தப் பச்சடியை தமிழ்ப் புத்தாண்டில் தயாரித்து வருவது நமது வழக்கத்தில் உள்ளது. வாழ்க்கைத் தத்துவத்தை எளிதாக உணர்த்துவதால் இதற்குத் `தத்துவப் பச்சடி’ என்கிற பெய