
தேவையானவை
மைதா, கடலைமாவு – தலா ஒரு கப்
மஞ்சள் கலர். – அரை டீஸ்பூன்
நெய் – ஒன்றரை கப்
சர்க்கரை. – ஒரு கப்
முந்திரி, பாதாம் துண்டுகள் – 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
முதலில் மைதாவை முந்தின நாள் இரவே தண்ணீரில் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.
கடலைமாவை வாசனை வரும் வரை வறுக்கவும். அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சர்க்கரையைப் போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு காய்ச்சவும்.
கம்பி பாகு பதம் வந்ததும், மைதா, வறுத்த கடலைமாவை சேர்த்துக் கெட்டியாகக் கிளறவும்.
கலவை இறுகி வந்ததும், நெய், கலர் சேர்த்து மேலும் கெட்டியாகக் கிளறி, முந்திரி, பாதாம் தூவி தட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும்