
தாஹினி அல்வா
தேவையான பொருட்கள்
சர்க்கரை – 300 கிராம்
எள்ளு – 300 கிராம்
தண்ணீர் – 100 மி.லி.
எசன்ஸ் – தேவையெனில்
பிஸ்தா, பாதாம், வேர்க்கடலை – 1/4 கப்
முதலில் பாதாம், பிஸ்தா, வேர்க்கடலை போன்றவற்றை வெறும் வாணலியில் நன்றாக வறுத்து, தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும். சர்க்கரையை தண்ணீரில் இட்டு கரைத்து மிதமான சூட்டில் வைத்து கிளறிக் கொண்டேயிருக்கவும் பாகு பதம் வரும் வரை பதம் வந்ததும் அத்துடன் வறுத்து தோலுரித்து வைத்துள்ள பாதாம், பிஸ்தா, வேர்க்கடலை ஆகியவற்றை கொட்டி நன்கு கிளறவும்.
வாசனை தேவையெனில் எசன்ஸ் 1/2 ஸ்பூன் (வெனிலா) விட்டு கிளறவும். ஒரு பாத்திரத்தில் எள்ளை போட்டு அதில் இந்த கலவையை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும். வேகமாகவும் பத்திரமாகவும் கிளற வேண்டும்.