
வாழைப்பூ அடை
தேவையானவை:
நறுக்கிய வாழைப்பூ – ஒரு கப்,
புழுங்கல் அரிசி – 2 கப்,
துவரம்பருப்பு – 6 டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 3 டேபிள்ஸ்பூன்,
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5,
கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய் – 8 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை: அரிசியையும் பருப்புகளையும் ஒன்றுசேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து… காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். கடுகு, கறிவேப்பிலையை தாளித்து மாவில் சேர்க்கவும். கொத்தமல்லித் தழையையும் சேர்க்கவும். 3 டேபிள்ஸ்பூன் எண்ணெயில் வாழைப்பூவை வதக்கி, அதையும் மாவுடன் சேர்க்கவும். தோசைக்கல்லில் இரண்டு கரண்டி மாவை ஊற்றி, ஓரங்களில் எண்ணெய் ஊற்றி, ஒரு புறம் வெந்ததும், திருப்பிப் போட்டு நறுக்கிய கொத்தமல்லித்தழையை தூவி, வேகவிட்டு எடுக்கவும்.
இந்த அடையை வெண்ணெய் தொட்டுச் சாப்பிடலாம்.