ஆரோக்கிய சமையல்: தூதுவளை தோசை!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
thuthovalai-thosai-1
thuthovalai-thosai-1

தூதுவளை தோசை
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி – ஒரு கப்
தூதுவளை இலைகள் – 12
மிளகு – 10
சீரகம் – அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் (அ) காய்ந்த மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
படத்தில் உள்ளது போல் தூதுவளை இலையின் நரம்பை எடுத்துவிட்டு அலசி வைக்கவும். புழுங்கலரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

அரிசி ஊறியதும் களைந்துவிட்டு, மிளகாய், சீரகம், மிளகு, தூதுவளை மற்றும் உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.

தோசைக் கல்லை சூடாக்கி அரைத்த மாவை மெல்லிய தோசையாக ஊற்றி வேகவிடவும்.

ஒரு புறம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபுறத்தையும் வேகவிட்டு எடுக்கவும்.

சுவையான தூதுவளை தோசை தயார். காரச் சட்னியுடன் சூடாகப் பரிமாறவும். சளித் தொந்தரவு உள்ளவர்கள் சாப்பிடுவதற்கு உகந்தது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.