மாங்காய் மிக்ஸ்டு ஊறுகாய்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
mango urukai
mango urukai

மாங்காய் மிக்ஸ்டு ஊறுகாய்

தேவையானவை:
கெட்டியான மாங்காய் – 2,
கேரட் – 2,
தோலுரித்த பச்சைப் பட்டாணி – அரை கப், பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டேபிள்ஸ்பூன்,
அதிக காரமில்லாத நீட்ட பச்சை மிளகாய் – 4,
ஒன்றிரண்டாக பொடித்த கடுகுப் பொடி – ஒரு டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்,
உப்பு, வினிகர் – தலா 2 டீஸ்பூன்.

செய்முறை:
மாங்காயை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நான்கு துண்டுகளாக்கவும். ஒரு சுத்தமான பாட்டிலில் நறுக்கிய காய்கறித் துண்டுகள், பச்சைப் பட்டாணி, பொடியாக நறுக்கிய இஞ்சி, கடுகுப் பொடி, மஞ்சள்தூள், வினிகர், உப்பு, எண்ணெய், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு குலுக்கி, ஒரு வாரம் ஊறவிட்டு, பின்னர் உபயோகிக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.