வெள்ளரி தயிர் தக்காளி சாலட்
தேவையான பொருட்கள்
தயிர் – 1 கப்
வெள்ளரி – 1
தக்காளி – 1
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
தேன் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையானளவு
கொத்தமல்லி இலை – அலங்கரிக்க
செய்முறை :
வெள்ளரிக்காய், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தயிரை நன்றாக கலந்து கொள்ளவும்.
நறுக்கிய வெள்ளரி, தக்காளி, மிளகு தூள், தேன், உப்பை தயிரில் சேர்த்து நன்கு கலக்கவும்.
கடைசியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
சுவையான, குளு குளு வெள்ளரி தளிர் தக்காளி சாலட் தயார்.