வெள்ளரிக்காய் இட்லி
தேவையான பொருட்கள் :
வெள்ளரிக் காய் – 250 கிராம்
ரவை – 250 கிராம்
தேங்காய் துருவல் – 3 தேக்கரண்டி
புளித்த தயிர் – 3 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 4
உப்பு – தேவைக்கு
செய்முறை:
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெள்ளரிக் காயை தோல் நீக்கி துருவி கொள்ளவும்.
துருவிய வெள்ளரிக் காயுடன் ரவையை போட்டு கலந்து கொள்ளவும்.
பின்னர் அதனுடன் தேங்காய் துருவல், தயிர், பச்சை மிளகாய், உப்பு ஆகிய வற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
தேவைப் பட்டால் சிறிது நீர் ஊற்றவும் இதனை அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
அடுப்பில் இட்லி பானையை வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
அதன் பின்னர் இட்லி தட்டில் மாவை ஊற்றி 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
வேக வைத்த இட்லியை தட்டில் வைத்து சட்னி அல்லது சாம்பாருடன் சேர்த்து சுவை யுங்கள்.