தேவையான பொருட்கள்
2 கப் நுங்கு
1 கப் பால்
1 கப் சக்கரை
1 டீஸ்பூன் ரோஸ்மில்க் எஸன்ஸ்
5-10 கிராம் அகர் அகர்
1/2 கப் தண்ணீர்
செய்முறை
முதலில் நுங்கினை சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும்.பின்னர் இதனை 1கப் எடுத்து மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
பின்னர் அகர் அகர் தண்ணீரில் சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும். 10 நிமிடம் பின் இதனை அடுப்பில் வைத்து அகர் அகர் நன்கு கரையும் வரை அடுப்பில் சிறிது நேரம் வைக்கவும்
பால் அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்ச வேண்டும்.பால் சிறு கெட்டியாக சிறிது வற்றிய பின் சக்கரை சேர்த்து கரைந்ததும் அடுப்பை அணைத்து பாலினை ஆற விடவும். பின்னர் பாலில் அகர் அகர் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.இதில் இப்போது அரைத்த நுங்கு சேர்த்து கலந்து கொள்ளவும்
இப்போது இதனை விரும்பிய பாத்திரத்தில் ஊற்றி 1 கப் நறுக்கிய நுங்கு மற்றும் ரோஸ்மில்க் எஸன்ஸ் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.இதனை ப்ரிசரில் வைக்கவும்
ப்ரிசரில் வைத்து சிறு நேரம் பின் எடுத்தால் சுவையான நுங்கு ரோஸ்மில்க் புட்டிங் தயார்