அஜித் ஷாலினி: வைரலாகும் லேட்டஸ்ட் ஃபோட்டோ!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
ajith 1 - 2026

அஜித் தனது 50 வது பிறந்த நாளை மே 1 அன்று கொண்டாடினார். கொரோனா பரவல் காரணமாக மிக எளிய முறையில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் அஜித் பிறந்த நாளை கொண்டாடினார். இந்த சமயத்தில் மனைவி ஷாலினியுடன் அஜித் எடுத்துக் கொண்ட க்யூட்டான ஃபோட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது அஜித்தின் 50 வது பிறந்த நாளில் அவரது வீட்டில் எடுக்கப்பட்ட ஃபோட்டோ என தகவலும் பரப்பப்படுகிறது. ஆனால் அது உண்மையா என்பது இதுவரை தெரியவில்லை. இருந்தாலும் மனைவி ஷாலினியின் பின்புறம் நின்று அஜித் சிரித்தப்படி இருக்கும் இந்த ஃபோட்டோ பலரின் மனங்களையும் ஈர்த்துள்ளது.

அஜித் மஞ்சள் நிற சட்டையிலும், ஷாலினி கருப்பு நிற உடையிலும் இருப்பது இந்த ஃபோட்டோவிற்கு கூடுதல் ஈர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ajith 1
ajith 1

அஜித்தின் பிறந்த நாளன்று வெளியிடப்பட இருந்த வலிமை ஃபஸ்ட்லுக் போஸ்டர் தள்ளிப் போனதால் ஏமாற்றத்தில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு வைரலாகும் இந்த ஃபோட்டோ உற்சாகத்தை கொடுத்துள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பு கடந்த ஓராண்டிற்கும் மேலாக நடந்து வருகிறது. ஆனால் ஃபஸ்ட்லுக் போஸ்டர், அப்டேட் என ஏதும் வெளியிடப்படாமல் இருந்தது. ஒரு வழியாக அஜித்தின் பிறந்தநாளன்று ஃபஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்திருந்தார்.

ஆனால் கொரோனா தீவிரமடைந்து வருவதால் அதுவும் தள்ளி வைக்கப்படுவதாக பிறகு போனி கபூரே அறிவித்தார். இதற்கிடையில் ஸ்பெயின் நாட்டில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ள ஒரு சண்டைக் காட்சிகள் எடுக்கப்படாமல் உள்ளதால் படத்தின் வேலைகளை முடிக்க முடியாமல் படக்குழு திணறி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.