நல்ல சுவை தரும் முலாம் பழ கேசரி!

Published:

mulam fruit kesari

முலாம்பழ கேசரி

தேவையானவை:

முலாம்பழ விழுது – அரை கப்
ரவை – அரை கப்
சர்க்கரை – ஒரு கப்
தண்ணீர் – ஒன்றரை கப்
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
நெய் – கால் கப்
முந்திரி, திராட்சை – தலா 5

செய்முறை:

வாணலியில் பாதியளவு நெய்விட்டு சூடாக்கி முந்திரி, திராட்சையைச் சேர்த்து வறுத்தெடுத்து தனியாக வைக்கவும். அதே நெய்யில் ரவையைச் சேர்த்து நன்கு வறுக்கவும். இத்துடன் சுடவைத்த தண்ணீரை ஊற்றி ரவையை வேக விடவும். ரவை வெந்த பிறகு சர்க்கரை, முலாம்பழ விழுது, ஏலக்காய்த்தூள் சேர்த்து வேக விடவும். பிறகு நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: முலாம்பழத்தைத் துருவியும் சேர்க்கலாம். விரும்பினால் கால் டீஸ்பூன் வெனிலா எசன்ஸ் சேர்த்தும் செய்யலாம்.

Related articles

Recent articles

spot_img