
மெலன் ரசாயனா
தேவையானவை:
முலாம்பழம் – ஒன்று
தேங்காய்ப்பால், வெல்லம் – தலா அரை கப்
ஏலக்காய்த்தூள் – 2 சிட்டிகை
புதினா இலைகள் – 2 (அலங்கரிக்க)
செய்முறை:
வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கரைத்து வடிகட்டவும். முலாம்பழத்தின் தோல், விதைகளை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கவும். வெல்லக் கரைசலுடன் பழத் துண்டுகளைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர் தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். பிறகு வெளியே எடுத்து புதினா இலைகள் தூவி பரிமாறவும்.
குறிப்பு: இது மங்களூரில் பிரபலமான டெசர்ட்.