கலக்கலா முலாம்பழ கீர்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
kheer
kheer

முலாம்பழ கீர்

தேவையானவை:

முலாம்பழம் – ஒன்றில் பாதி
காய்ச்சாத பால் – அரை கப்
பால் பவுடர் – 2 டீஸ்பூன்
கண்டன்ஸ்டு மில்க் – ஒரு டீஸ்பூன்
சர்க்கரை – 3 டீஸ்பூன்
பாதாம் – 4 (சிறிய துண்டுகளாக நறுக்கவும் )
வெனிலா எசன்ஸ் – கால் டீஸ்பூன்

செய்முறை:

முலாம்பழத்தின் தோல், விதைகளை நீக்கி விட்டு சதைப்பகுதியை துருவவும் (மிக்ஸியில் போட்டு அரைத்தும் எடுக்கலாம்). பால், பால் பவுடர், கண்டன்ஸ்டு மில்க், சர்க்கரை சேர்த்து நன்கு காய்ச்சி ஆற வைக்கவும். இத்துடன் அரைத்த முலாம்பழ விழுது, வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மேலே பாதாம் துண்டுகளைத் தூவி பரிமாறவும்.

குறிப்பு: குளிரவைத்தும் பரிமாறலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.