December 6, 2025, 7:27 AM
23.8 C
Chennai

திருப்புகழ் கதைகள்: தொழுநோய் அறிவியல்!

thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ் கதைகள் பகுதி 69
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

தொழுநோய் அறிவியல் செய்திகள் – பகுதி 1

தொழுநோய் என்பது ஒரு தொற்று நோயாகும். இந்த நோய் கடுமையான தோல் அழற்சியை ஏற்படுத்துகிறது. மற்றும் கை, கால் சருமத்தின் இதர பகுதிகளில் நரம்புகளில் சேதம் உண்டாக்குகிறது. தொழுநோய் பற்றி பயத்தை உண்டாக்கும் பல வித கதைகள் நமது வரலாற்றில் உண்டு. நீண்ட நெடுங்காலமாக இந்த பாதிப்பு பல்வேறு எதிர்மறை களங்கத்துடன் மனித இனத்தை பயமுறுத்தி வருகிறது.

தொழு நோயின் தாக்கம் மற்றும் அதன் விளைவுகள் ஒவ்வொரு கண்டத்தில் உள்ள மனிதர்களையும் பாதித்து வருகிறது. சீனா, எகிப்து மற்றும் இந்தியாவின் பண்டைய நாகரீகங்களில் தொழுநோய் என்பது மருந்து இல்லாத, உரு சிதைக்கும், தொற்று நோயாக இருந்து வந்தது. இருப்பினும் தொழு நோய் என்பது பயப்படும் அளவிற்கு தொற்று நோயல்ல.

தொழு நோய்க்கு சிகிச்சை எடுக்காமல் இருக்கும் நோயாளியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருத்தல் மற்றும் அவரின் மூக்கு மற்றும் வாயில் இருந்து வடியும் நீர் ஒருவர் சருமத்தில் அடிக்கடி படும்போது தொழு நோய் பரவும் வாய்ப்புள்ளது. பெரியவர்களைவிட குழந்தைகளை இந்த நோய் அதிகம் பாதிக்கிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்பின்படி, உலகம் முழுவதும் உள்ள தொழு நோயாளிகள் எண்ணிக்கை 1,80,000 ஆகும். அதிலும் ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவில் அதிகமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 100 பேர் தொழுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

அதிலும் அதிகமாக தெற்கு பகுதியில், கலிபோர்னியா, ஹவேலி, மற்றும் இதர மாகாணங்களில் அதிக மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மெதுவாக வளரும் பக்டீரியா வகையைச் சேர்ந்த மைகோபக்டீரியம் லேப்ரே என்ற பாக்டீரியா தொழுநோய்க்கு காரணமாக உள்ளது. 1873இல் M.லேப்ராவை கண்டுபிடித்த விஞ்ஞானியின் பெயரால், தொழுநோய் ஹான்ஸென் நோய் என்றும் அறியப்படுகிறது.

arunagiri muruga peruman
arunagiri muruga peruman

தொழுநோய் முதன்மையாக சருமத்தை பாதிக்கிறது. மூளைக்கு வெளிப்புறம் உள்ள நரம்புகளையும், முதுகுத்தண்டையும் பாதிக்கிறது. தொழுநோய் கைகளையும் பாதிக்கலாம் மற்றும் மூக்கின் மெல்லிய திசுக்களையும் பாதிக்கலாம். உருச்சிதைக்கும் சரும புண், கட்டிகள், பல வாரங்கள் அல்லது மாதங்கள் ஆனாலும் கரையாத புடைப்பு போன்றவை தொழுநோயின் முக்கிய அறிகுறியாகும்.

சருமத்தில் உள்ள புண் வெளிர் நிறத்தில் காணப்படும். கை மற்றும் கால்களில் உணர்வு இழப்பு ஏற்படலாம். தசைகள் பலவீனமாகலாம். தொழுநோய் தாக்கும் பாக்டீரியாவுடன் தொடர்பு ஏற்பட்டு 3 முதல் 5 வருடம் கழித்தே நோய் தாக்கத்திற்கான அறிகுறிகள் தென்படும்.

சில மனிதர்களுக்கு 20 வருடத்திற்கு பின்னும் அறிகுறிகள் தென்படாது. பாக்டீரியாவுடன் தொடர்பு ஏற்பட்ட காலம் மற்றும் அறிகுறிகள் தென்படும் காலம் ஆகிய இரண்டுக்கும் இடையான காலத்தை இன்குபேஷன் அதாவது அடைகாக்கும் காலம் என்று கூறுகின்றனர். இந்த அடை காக்கும் காலம் நீடித்து இருக்கும் போது ஒரு மனிதனுக்கு எப்போது எந்த இடத்தில் தொழு நோய் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை தீர்மானிக்க முடியாத நிலை மருத்துவர்களுக்கு உண்டாகிறது.

சருமத்தில் உண்டாகும் புண்களின் எண்ணிக்கை மற்றும் வகைகளைப் பொறுத்து தொழு நோய் வகை தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு குறிப்பிட்ட வகை தொழு நோய்க்கும் அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் வேறுபடுகின்றன. தொழு நோயின் வகைகள் பற்றி இப்போது காணலாம்.

ட்யுபர்குலைடு : இது ஒரு மிதமான, குறைவான தீவிர நிலையைக் கொண்ட ஒரு வகை தொழுநோய். இந்த வகை தொழு நோய் பாதிக்கபட்டவர்களுக்கு ஒன்று அல்லது ஒரு சில தழும்புகள் மட்டுமே இருக்கும், அந்த தழும்புகள் வெளிர் நிறத்தில் இருக்கும்.

சருமத்திற்கு அடியில் உள்ள நரம்புகளில் சேதம் ஏற்பட்டிருப்பதால் பாதிக்கப்பட்ட சருமத்தில் உணர்வு அற்று மரத்துப்போன நிலை இருக்கும். மற்ற வகை தொழுநோயை விட இந்த வகை தொழுநோயில் பரவும் வாய்ப்பு குறைவாக இருக்கும்.

இன்னும் சில தொழுநோய் வகைகள் உள்ளன. அவற்றை நாளைக் காணலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories