ஆங்கிலேயனுக்கு அடிபணியா அஞ்சாநெஞ்சன் அழகுமுத்துக்கோன்!

azhagumuthukonhead - 2026

நாட்டின் விடுதலைக்காக போராடி வீரமரணம் அடைந்தவர்களின் நினைவை போற்றுவதே சிறப்பு!

ஜூலை-11, மன்னர் வீரஅழகுமுத்துக்கோன்(1728-18.11.1757) அவர்களின் பிறந்தநாள் என்று தமிழகஅரசால் அறிவிக்கப்பட்டு மாநில அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது

இந்திய வரலாற்று ஏடுகளில் 1857-ல்  தான் முதல் விடுதலை போர் நடந்ததாக கூறப்பட்டுள்ளது. அதற்க்கு 100 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவின் முதல் விடுதலை போர் தமிழகத்தில் நடந்துள்ளது. போரை நடத்திய தமிழன் கட்டாலங்குளம் மன்னர் வீரஅழகுமுத்துக்கோன் 

முதல் விடுதலை வீரர் மன்னர் வீரஅழகுமுத்துக்கோன் வரலாறு:

பெயர் : வீரஅழகுமுத்துக்கோன்
பிறப்பு : கி.பி.1728
வீரமரணம் : கி.பி. 18.11.1757
பெற்றோர் : மன்னர் அழகுமுத்துக்கோன்,ராணி அழகுமுத்தம்மாள்
குலம் : ஆயர்(யாதவர்)
கோத்ரம் : கிருஷ்ணகோத்ரம்
குடும்பப் பட்டங்கள் : வானரவீரர், வானாதிராயர், மிலாடுடையர், சேர்வைக்காரர்
பிறப்பிடம் : கட்டாலங்குளம் அரண்மனை,திருநெல்வேலிசீமை (தற்போது தூத்துக்குடி) தமிழ்நாடு
வகித்த பதவி : அரசர், முதல் விடுதலைப்போராட்ட வீரர்

azhagumuthukon1 - 2026

வாழ்க்கை வரலாறு :

வீரஅழகுமுத்துக்கோன் கட்டாலங்குளம் சீமையின் அரசராக இருந்தவர்.மன்னர் வீரஅழகுமுத்துக்கோனுக்கு ஜெகவீரராமபாண்டிய எட்டப்பன் என்கிற எட்டயபுரம் மன்னர் சிறந்த நண்பராக விளங்கினார். இந்தியாவின் முதல் விடுதலை போர் 1857 என்று அறியப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே இந்தியாவின் பல இடங்களில் போர் நடந்துள்ளது. அதில் முதன்மையானவர் மன்னர் வீரஅழகுமுத்துக்கோன்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

பிறப்பு :

தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன் 1725-ம் ஆண்டு கட்டாலங்குளம் மன்னராக முடி சூட்டி கொண்டார். இவருக்கும் ராணி அழகுமுத்தம்மாளுக்கும் 1728-ம் ஆண்டு நமது விடுதலை வீரர் வீரஅழகுமுத்துக்கோன் பிறந்தார். 1729-ம் ஆண்டு தம்பி சின்னஅழகுமுத்துக்கோன் பிறந்தார்.

மன்னராக :

1750-ல் தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன் அனுமந்தகுடி போரில் வீர மரணம் அடைந்தார். தந்தை இறந்த அதே ஆண்டு 1750-ல் அண்ணன் வீரஅழகுமுத்துக்கோன் தன்னுடைய 22-ம் வயதில் மன்னராக முடி சூட்டி கொண்டார்.

azhagumuthukon3 - 2026

சின்ன அழகுமுத்துக்கோன்:

1755-ல் அண்ணன் வீரஅழகுமுத்துக்கோன் தலைமையில் நடந்த முதல் விடுதலை போரில் தம்பி சின்னஅழகுமுத்துக்கோன் பெருமாள்கோயில் வாசலில் வைத்து சுடப்பட்டு வீரமரணம் அடைந்தார்.

ஆங்கிலேயர்களை எதிர்த்து :

முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்தும், பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டுவதை தடுக்கவும் செய்தார், மன்னர் வீரஅழகுமுத்துக்கோன். இதனால் கோபமுற்ற ஆங்கிலேய அரசு பிரிட்டிஷ் ஜெனரல் முகம்மது யூசுப் கான்(கான் ஷா கெப்) தலைமையில் ஆங்கிலேய படைகளை அனுப்பி வைத்தது. மன்னர் வீரஅழகுமுத்துக்கோனுக்கும் முகம்மது யூசுப் கானுக்கும்(மருதநாயகம்) பெத்தநாயக்கனூர் கோட்டையில் போர் நடந்தது. மன்னர் வீரஅழகுமுத்துகோனின் குதிரை சுடப்பட்டது மற்றும் அவரது வலது கால் சுடப்பட்டது. இருப்பினும் 3 மணி நேரம் போர் தொடர்ந்தது. இறுதியில் மன்னர் வீரஅழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களும் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடுக்காட்டூர் என்னும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ALSO READ:  ஜனநாயகன் - விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

மன்னிப்பு கேட்க மறுப்பு :

பீரங்கி முன் நிறுத்தப்பட்டு வரி செலுத்துமாறு வற்புறுத்தப்பட்டனர். மன்னிப்பு கேட்டால் உயிர் மிஞ்சும் என்று கேட்டும் மன்னர் வீரஅழகுமுத்துக்கோன் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.

வீரமரணம் :

பிறகு 248 வீரர்களின் வலது கரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. பீரங்கி முன் நின்ற மன்னர் வீரஅழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகள்

  1. கெச்சிலணன்கோனார்
  2. முத்தழகுக்கோனார்
  3. வெங்கடேஸ்வர எட்டுக்கோனார்
  4. ஜெகவீரரெட்டுக்கோனார்
  5. முத்திருளன்கோனார்
  6. மயிலுபிள்ளைகோனார் – மார்பில் சுடப்பட்டு வீரமரணம் அடைந்தனர்.
azhagumuthukon2 - 2026

சிறப்புகள் :

பீரங்கி முன் நின்று சாகும் தருவாயிலும் தன்னைச் சேர்ந்தவர்களை காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று கூறிய நெஞ்சுரம் மிக்கவர் மன்னர் வீரஅழகுமுத்துக்கோன் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னர் அழகுமுத்துக்கோன் வம்சத்தில் எவரும் 40வயதை கடப்பதற்கு முன்பே போர்களத்தில் வீரமரணம் அடைந்துள்ளனர்.

கட்டாலங்குளத்தை கடந்து செல்லும் எவரும் குதிரை,யானை,பல்லக்கில் அமர்நது செல்லக்கூடாது.

கட்டாலங்குளம் சுற்றியுள்ள பாளையக்காரர்களை பதவி இறக்கும் அதிகாரத்தை திருமலைநாயக்கர் தாத்தா கிருஷ்ணப்ப நாயக்கரிடம் இருந்து மன்னர் வீரஅழகுமுத்துக்கோன் முன்னோர்கள் பெற்றிருந்தனர்.

ஜெகவீரராமபாண்டிய எட்டப்பநாயக்கர் மகன் வெங்கடேஸ்வர எட்டப்பநாயக்கருக்கு பெருநாழிகாட்டில் மன்னர் வீரஅழகுமுத்துக்கோன் முடிசூட்டி வைத்தார்.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

இத்தகைய சிறப்புகளை  கொண்ட இந்த மாவீரரின் வீரவரலாறு பல ஆண்டுகளாக மறைக்கப்பட்டும், திரிக்கப்படும் இருந்தன. விருதுநகரை சார்ந்த ஆராய்ச்சியாளர் சுபாஷ்சேர்வை அவர்கள் பல ஆண்டுகளாய் களஆய்வு செய்து வீரவரலாறை வெளிக் கொண்டு வந்துள்ளார். இதற்காக தமிழ்உலகம் அவருக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளது.

  • மதுரை கா.ராஜேஷ்கண்ணா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories