அதி அற்புத சுவை.. குதிரைவாலி கேசரி!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Kuthiraivaali kesari
Kuthiraivaali kesari

குதிரைவாலி கேஸரி
தேவையான பொருட்கள்

1கப் குதிரைவாலி அரிசி
1 1/2கப் சக்கரை
1/4 கப் நெய்
முந்திரி, பாதாம், திராக்ஷை, ஏலக்காய்

செய்முறை
முதலில் ஒரு வாணலியை ஸ்டவ்வில் வைத்து ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி குதிரைவாலியை சேர்த்து வாசம் வரும் வரை வறுத்து எடுத்து ஒரு தட்டில் பரப்பி ஆற விடவும். ஆறினதும் அதை மிக்ஸி ஜாரில் போட்டு ரவை பதத்துக்கு பொடிபண்ணிக்கவும்

வாணலியை ஸ்டவ்வில் வைத்து 1கப் க்கு 2 1/2 பங்கு தண்ணி சேர்த்து கொதிக்க விடவும் அத்துடன் தேவையானால் கேஸரி கலர் சேர்த்துக்கவும். நன்கு கொதித்ததும் அதில் குதிரைவாலி ரவை சேர்த்து கிளறி வேக விடவும்

நன்கு வெந்து வந்ததும் எடுத்து வைத்திருக்கும் சக்கரை சேர்த்து, கிளறி, நெய் சேர்த்து ஒட்டாமல் வரும்போது ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கி பவுலில் எடுத்து வைத்துவிடடு நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம், திராக்ஷை சேர்த்து பரிமாறவும்.. சுவையான ஹெல்த்தியான குதிரைவாலி கேஸரி சுவைக்க தயார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.