சிறுகிழங்குப் பொரியல்
தேவையான பொருட்கள்:
சிறுகிழங்கு – 200 கிராம்,
கடலைப்பருப்பு, மல்லி (தனியா) – தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – ஒன்று,
தேங்காய் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு,
கடுகு – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
சிறுகிழங்கை குக்கரில் வேகவிட்டு இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். ஆறியவுடன் அதன் தோலை உரித்து இரண்டாக நறுக்கிக்கொள்ளவும். கடலைப்பருப்பு, மல்லி, காய்ந்த மிளகாயை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, கடுகு தாளிக்கவும். அதில் நறுக்கி வைத்திருக்கும் சிறுகிழங்கைப் போட்டு வதக்கவும். பிறகு உப்பு, பெருங்காயத்தூள் மற்றும் வறுத்துப் பொடித்து வைத்திருக்கும் பொடியையும் சேர்த்து வதக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கிழங்கு மொறுமொறுப்பானதும் எடுக்கவும்.