ரவை ரோஸ் பாயசம்
தேவையானவை:
ரவை – ஒரு கப்,
பால் – அரை லிட்டர்,
முந்திரி, திராட்சை – தலா 10,
சர்க்கரை – தேவையான அளவு,
ரோஸ் எசன்ஸ் – சிறிதளவு, ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்,
நெய் – 3 டீஸ்பூன்.
செய்முறை:
வாணலியில் சிறிதளவு நெய் விட்டு ரவையை லேசாக வறுக்கவும். பிறகு, மீதமுள்ள நெய்யில் முந்திரி, திராட்சையை வறுக்கவும். பாலைக் காய்ச்சி ஆறவிடவும்.
அடி கனமான பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். நன்கு கொதிக்கும்போது அடுப்பை சிறு தீயில் வைத்துவிட்டு, ரவையை சேர்த்துக் கிளறவும். ரவை நன்கு வெந்த பின் காய்ச்சி ஆறவைத்த பால், சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து ஒரு கொதி விட்டு, இறக்கும்போது ரோஸ் எசன்ஸ், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.
ரோஸ் எசன்ஸ் சேர்ப்பதால், இந்தப் பாயசம் புதுமையான சுவையுடன் இருக்கும்.