ஸ்வீட் அண்ட் சால்டி நட்ஸ்
தேவையானவை:
பாதாம், முந்திரி – தலா 50 கிராம்,
சர்க்கரை – 100 கிராம்,
வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – ஒரு சிட்டிகை.
செய்முறை:
பாதாம், முந்திரியை வெறும் வாணலியில் தனித்தனியே வறுக்கவும். பிறகு, வாணலியில் வெண்ணெய் சேர்த்து உருக்கி… சர்க்கரை, உப்பு சேர்த்துக் கலந்து, சிறிதளவு தண்ணீர் விட்டு ஒரு கொதிவிடவும். பிறகு நட்ஸ் வகைகளுடன் சேர்த்து கலந்து மீண்டும் கொதிக்கவிட்டு… நட்ஸ்கள் மீது சர்க்கரை ஒட்டிக் கொண்டு சுருண்டு வரும் வரை அடிப்பிடிக்காமல் கிளறவும். உப்பு தூவிக் கிளறி, இறக்கிப் பரிமாறவும்.