வாவ்.. வளைச்சு அடிப்பாங்க.. சேவ் பூரி!

Published:

chev puri
chev puri

சேவ் பூரி

தேவையானவை:
கோதுமை மாவு – ஒரு கப்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) – 3 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் – தலா ஒன்று, கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
வறுத்த வேர்க்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன் (ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்), கொத்தமல்லித்தழை – புதினா விழுது – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
கோதுமை மாவினை உப்பு சேர்த்துப் பிசைந்து, சிறிய பூரியாக தேய்த்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இதன்மீது நறுக்கிய தக்காளி, வெங்காயம், கொத்தமல்லித்தழை தூவி, ஓமப்பொடி போட்டுக் கிளறி, கொத்தமல்லித்தழை – புதினா விழுது ஊற்றி, அதன் மேலே வேர்க்கடலை பொடி தூவி பரிமாறவும்.

குறிப்பு: ரெடிமேடாக கிடைக்கும் பானிபூரியை பயன்படுத்தியும் இதே மாதிரி செய்யலாம்.

Related articles

Recent articles

spot_img