
ஜவ்வரிசி காரப்பணியாரம்
தேவையானவை:
தோசை மாவு – ஒரு கப்,
ஜவ்வரிசி – கால் கப், உப்பு,
எண்ணெய் – தேவைக்கேற்ப,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, கடுகு – ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன், வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு – கால் கப்.
செய்முறை:
ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.தோசை மாவில் கடுகு, நறுக்கிய பச்சைமிளகாய் தாளித்துப் போடவும். மேலும் ஜவ்வரிசி, உருளைக் கிழங்கை போட்டு கொத்தமல்லித்தழை, உப்பு தூவி கலக்கவும்.குழிப்பணியாரக்கல் ஒவ்வொன்றிலும் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொரு குழியிலும் ஜவ்வரிசி கலவையை ஊற்றி வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.



