அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு.‌. குழந்தைகளுக்கு..!

health tips 1
health tips 1

குழந்தை மண்ணைத் தின்கிறதா?

துளசி 50 கிராம், கடுக்காய்த் தோல் 50 கிராம், கீழாநெல்லி வேர் 25 கிராம் இவற்றை நன்றாக அரைத்து வைத்துக்கொண்டு ஒரு பாலாடை அளவு புளித்த மோரில் 10 கிராம் மருந்தைக் கலக்கி மூன்று நாள்களுக்கு காலை மாலை கொடுக்கவும். அதன் பின் மண், சாம்பல் தின்னாது.

குரல் இனிமை பெற…

சிவந்த மாவிலைத் தளிர்களைப் பறித்து அப்படியே பச்சையாகவே வாயில் போட்டு மென்று சாப்பிட சில நாள்களில் குரல் இனிமை பெறும்.

ஆதி மூலக்கொடி இலைகளைச் சேகரித்து நிழலில் உலர்த்தி இடித்து தேன் விட்டு அரைத்து 4 நாள்கள் சாப்பிட தலைச்சுற்றல், கிறுகிறுப்பு. மயக்கம், மண்டைக்குள் ஏற்படும் வலி இவை தீரும். முகம் அழகு பெறும். குரல் இனிமையாவதோடு பாடும் வல்லமை பெறும். 80 நாள்கள் சாப்பிட புஜங்கள் திரண்டு பருக்கும். விரிந்த மார்பும், படர்ந்த நெஞ்சமும், கலங்கா இதயமும் கிட்டும்.

குழந்தைக்கு அக்கியா?

  • பசலைக் கீரையை நன்றாக அரைத்து பசுவெண்ணெயில் குழப்பி அக்கிக் கொப்புளங்களின் மேல் போட்டு வர அப்படியே அமுங்கி மறைந்து விடும்.

பப்பாளிச் சாற்றை பசும்பாவில் கலந்து அக்கியின் மேல் பூசி வர குணமாகும்.

அக்கி அதிகமாயிருந்தால் பதப்படுத்தப்பட்ட மாட்டின் தோலைச் சுட்டுக் கருக்கி அந்த சாம்பலுடன் பசு வெண்ணெயைக் குழப்பிப் பூசி வர குணமாகும். செம்மரத்தினால் செய்யப்பட்ட மரப்பாச்சியை தண்ணீரில் உரைத்துப் போட்டாலும் குணமாகும்.

குடிப்பழக்கத்தை நிறுத்த… மனக்கட்டுப்பாட்டுடன் நாள்தோறும் கொத்துமல்லி கஷாயம் குடித்து வர. குடிக்க வேண்டும் என்ற ஆர்வம் போய்விடும். *

குடி மயக்கம் தெளிய…

குடி மயக்கத்தை தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றுங்கள். தேன் சிறிது சிறிதாக உள்ளே செல்லச் செல்ல குடிமயக்கம் தெளிந்து விடும்.

மாதுளம் பழத்தைத் தோலுடன் இடித்துச் சாறு பிழிந்து அத்துடன் கொஞ்சம் மிளகுப் பொடியையும் கலந்து வாயைத் திறக்கச் செய்து ஊற்ற சிறிது நேரத்தில் போதை தெளிந்து விடும்.

குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு…

குழந்தை நோய்களுக்கு துளசி கண் கண்ட மருந்தாகும். கொஞ்சம் துளசியை சுத்தம் செய்து சற்று ஆவியில் காட்டிக் கசக்கிப் பிழிந்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி அளவு சாற்றில் சிறிது கோரோஜனை மாத்திரை ஒன்றைக் கரைத்து கொடுத்து வர அவ்வப்போது வரும் நோய்கள் அனைத்துமே குணமாகி விடும்.

குழந்தைகள் கழிச்சலுக்கு கோரோசனை, களிப்பாக்கு, சீரகம், காசிக் கட்டி இவற்றைச் சம அளவு எடுத்து எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்துக் கொடுத்தால் உடனே நிற்கும்.

  • செவ்வாப்பு உள்ள குழந்தைகளுக்கு ஓர் அவுன்ஸ். விளக்கெண் ணெயில் ஒரு சேராங்கொட்டையைப் போட்டு நன்றாகக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு காலை. மாலைகளில் 10 முதல் 30 துளி வரை மூன்று நாள்கள் கொடுத்து வர குணமாகும். தொண்டைக்கட்டு கம்மலும் நீங்கும்.

குழந்தைகள் சரியாக மூத்திரம் போகாமல் கை கால் வீங்குவதுண்டு. கற்பூரத்தையும் சந்தனத்தையும் நல்லெண்ணெயில் கலந்து சூடாக்கி குழந்தையின் அடி வயிற்றில் தடவி சற்று ஒற்றடம் கொடுக்க உடனே மூத்திரம் போகும்.

குழந்தைகளின் முகத்தில் சில சமயம் பட்டாம் பூச்சித் தேமல் ஏற்பட்டு சொர சொரப்பாக இருக்கும். அதன் மேல் ஜாதிக்காயை நீரில் இழைத்துத் தடவி வர குணமாகும்.

பப்பாளிப்பழத்துண்டங்கள் சிலவற்றை சாப்பிட மலத்தில் வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளியாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories