
சட்புட் புட்டு
தேவையானவை:
சம்பா புட்டு மாவு – ஒரு கப் (ரெடிமேடாக கிடைக்கிறது),
தேங்காய்த் துருவல் – அரை கப், நாட்டுச்சர்க்கரை – கால் கப்,
முந்திரி – 4,
ஏலக்காய் – 2,
நெய் – சிறிது,
உப்பு- ஒரு சிட்டிகை.
செய்முறை:
வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை உப்பு கலந்து புட்டு மாவில் தெளித்து 10 நிமிடம் பிசிறி வைக்கவும். பிறகு ஆவியில் 7 நிமிடங்கள் வேகவிடவும். இதில் தேங்காய்த் துருவல், நாட்டுச்சர்க்கரை, நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.