சுட்டிஸ் சுத்தி வருவாங்க.. சுருள் ஸ்வீட் பூரி!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Sweet scroll puri
Sweet scroll puri

சுருள் ஸ்வீட் பூரி

தேவையானவை:
கோதுமை மாவு – ஒரு கப்,
பழக்கூழ் – கால் கப், எண்ணெய் – தேவைக்கேற்ப, வெல்லத் துருவல் – அரை கப்,
ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – கால் கப்,
உடைத்து வறுத்த முந்திரிப்பருப்பு – 10, உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:
கோதுமை மாவுடன் சீஸனுக்கு தகுந்த மாதிரி பப்பாளி பழக்கூழ், மாம்பழக்கூழ், வாழைப்பழம் மசித்து கலந்து, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு பூரிகளாக தேய்த்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் வெல்லத் துருவல், சிறிதளவு நீர் சேர்த்து வெல்லப்பாகு செய்து வடிகட்டிக்கொண்டு அதில் தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்க்கவும். இந்த ஸ்வீட் பூரணத்தை பொரித்து எடுத்த பூரியில் வைத்து சுருட்டி பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.