
பாதாம் வெங்காய சட்னி
தேவையான பொருட்கள்
4 பரிமாறுவது
2 பெரிய வெங்காயம்
3பச்சை மிளகாய்
10-12 பாதாம் பருப்பு
4பல் பூண்டு,
2 சின்ன துண்டு இஞ்சி
1சின்ன துண்டு புளி
கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், எண்ணெய்
உப்பு தேவைக்கு,
செய்முறை
முதலில் பாதாம் பருப்பை முழுகும் அளவு வெந்நீர் விட்டு 1/2 மணி நேரம் ஊற வைத்து தோல் உரித்து வைத்துக்கவும்.
வெங்காயத்தை பெரிய துண்டாக நறுக்கி வைத்துக்கவும், அத்துடன் பச்சைமிளகாய் இஞ்சி பூண்டு, புளி எடுத்து வைத்துக்கவும்
ஒரு வாணலியை ஸ்டவ்வில் வைத்து ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் பூண்டு, இஞ்சி, வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வெங்காயத்தின் கலர் மாறாமல் வதக்கி எடுத்து ஆற விட்டுக்கவும்
ஆறின பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காய கலவை, மற்றும் உரித்து வைத்திருக்கும் பாதாம் பருப்பு, புளியை பிச்சு சேர்த்து தேவையான உப்பும் சேர்த்து கொஞ்சமாக தண்ணி சேர்த்து நைசா அரைத்து ஒரு பவுலில் எடுத்து வைத்துக்கவும்
கடைசியாக கரண்டியில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெரு ம்காயம் தாளித்து கொட்டி சூடான இட்லி, தோசை, கிச்சடியுடன் பருமாறவும்..மிக சுவையுடன் கூடிய ஆரோக்கியமான பாதாம் வெங்காய சட்னி தயார்… குறிப்பு – இந்த சட்னிக்கு தேங்காய் தேவை இல்லை…