
நெல்லிக்காய் சர்பத்
தேவையான பொருட்கள்
5நெல்லிக்காயை
இந்து உப்பு சுவைக்கேற்ப
மிளகு கால் டீஸ்பூன்
சீரகம் அரை டீஸ்பூன்
ஓமம் கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் ஒன்று
கறிவேப்பிலை கொத்தமல்லி புதினா சிறிதளவு
இஞ்சி ஒரு துண்டு
பெருங்காயம் சிறிதளவு
செய்முறை
நெல்லிக்காயை தண்ணீர் விட்டு நைஸாக அரைத்தெடுத்து கொள்ளவும்.
மிளகு சீரகம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லி புதினா இஞ்சி ஓமம் முதலை பொருட்களை மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்து எடுத்து தண்ணீர் சேர்த்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
நெல்லிக்காய் சாறில் அரைத்து வறுத்த பொருட்களை கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து சேர்த்துக் கொள்ளவும். சுவையான நெல்லிக்காய் சர்பத் தயார் எலுமிச்சை பழ சாறு கால் டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம்.