
முகப்பருவுக்கு…
சுத்தமான மெழுகைப் பொடி செய்து அதில் கொஞ்சம் வெண்ணெயும், கிளிசரினும் விட்டு நன்றாகக் குழைத்து வைத்துக் கொள்ளுங்கள். இக்கலவையை இளஞ்சூட்டோடு எடுத்து இரவில் பருக்களின் மீது பூச விடிந்ததும் பரு மறைந்தே போகும்.
மருந்து கடைகளில் கிடைக்கும் புனுகை பருக்களின் மீது தடவி வர
சில நாள்களில் பருக்கள் மறையும்.
மலச்சிக்கல் முகப்பரு வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். அதைப் போக்க எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து நீரும் உப்பும் சேர்த்து சாப்பிட மலச்சிக்கல் நீங்கி முகப்பரு மறையும். எலுமிச்சம் சாற்றை பருக்களின் மீது தடவியும் வரலாம்.
புளியாரைக் கீரையை பன்னீர் விட்டு நன்கு மை போல் அரைத்து
முகப்பரு, கொப்புளங்கள். தீப்புண்கள் மீது பூச அவை நீங்கும்.
முடக்கு வாதத்துக்கு…
வயிற்று உப்புசம், வயிற்று வலி, முடக்கு வாதம், நாக்குப் பூச்சி இவை நீங்க நொச்சியிலையையும் மிளகையும் சேர்த்துக் கஷாயம் வைத்து சாப்பிடலாம். நொச்சி இலையை நசுக்கித் தலையில் வைத்துக் கட்ட தலைபாரம் உடல் நோவு தீரும்.
முழங்கால் வாதம், கணுவாதம் இவற்றுக்கு வேப்பிலை, வேலிப் பருத்தி இரண்டையும் சமமாக அரைத்துப் பற்றுப்போட இரண்டு மூன்று நாள்களில் வலி நீங்கி சுகம் ஏற்படும்.
வாரத்திற்கு இரு முறை முருங்கைக் காயை உணவில் சேர்த்து வர குடல் வலுப்பெறும். வயிற்றிலுள்ள வாயுவை நீக்கும். கபத்தை ஒழிக்கும். இரத்தமும் சிறுநீரும் சுத்தியடையும். பூட்டு வலியைப் போக்கும்.
முகப்பொலிவுக்கு…
ஆவாரம் பூவை உலர்த்தி தூள் செய்து, கடலை மாவுடன் கலந்து முகத்தில் தேய்த்து அரை மணி நேரத்திற்குப் பின் முகம் கழுவ முகப் பொலிவுடன் சுருக்கமும் விழாது.
முகத்தில் எண்ணெய் வழிகிறதா? பச்சைப் பயிறை தோலுடன் அரைத்து நீரில் குழைத்து முகத்தில் நன்றாய்த் தடவிக் கால் மணி நேரம் ஊறிக் குளிக்கலாம்.
மூளைச் சோர்வு நீங்க…
கல்யாணப் பூசணி சாறு ஓர் அவுன்ஸ் எடுத்து ஒரு தேக்கரண்டி தேனோ அல்லது தேவையான அளவு கற்கண்டோ, பனை வெல்லமோ சேர்த்து சாப்பிட அதிமோகத்தாலுண்டான தளர்ச்சியைப் போக்கும். மூளைச் சோர்வும் அசதியுமுள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த பானமாகும்.
அடிக்கடி வெண்டைக்காயை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிட மூளைக்கு பலம் தருவதுடன் இரத்தவிருத்தியும் ஏற்படும். சிறுநீரை தாராளமாக இறங்கச் செய்யும்.
தூதுவளைக் கீரையை அடிக்கடி உணவில் பருப்புடன் சேர்த்து சாப்பிட மூளை நரம்புகள் பலமடையும். கபம் நீங்கும்.
பலாப்பழத்தை தேனில் நனைத்து சாப்பிட மூளை நரம்புகள் நல்ல வலுவடையும்.