லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பேச்சுலர் புலாவ்!

Published:

batchular Pulav - 2026

பேச்சுலர் புலாவ்
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – ஒரு கப்
பட்டாணி – அரை கப்
உதிர்த்த கார்ன் – அரை கப்
வரமிளகாய் – 6
பட்டை – ஒன்று
சீரகம் – ஒரு மேசைக்கரண்டி
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் – தேவைக்கு
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – தாளிக்க
கடுகு – சிறிது
மல்லித் தழை – சிறிது

செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பட்டை, மிளகாய் மற்றும் சீரகத்தை போட்டு பொரிக்கவும். பெருங்காயம், மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூளை போட்டு கலக்கவும்.

பின் பட்டாணியையும், கார்னையும் உப்புடன் சேர்த்து நன்கு கிளறவும்.
மசால் நன்கு பிடித்ததும், உதிரியாக வேக வைத்த சாதத்தை போட்டு கிளறவும்.
சூடான புலாவ் ரெடி. மல்லித் தழையை தூவவும். வெங்காயம், தக்காளி போன்ற அடிப்படை பொருட்கள் இல்லாவிட்டாலும், குறைந்த பொருட்களை கொண்டு மிக விரைவில் செய்யலாம்.

ALSO READ:  வித்யா ததாதி விநயம்! பணிவே வெற்றியாளரின் உன்னதப் பண்பு!

Related articles

Recent articles

spot_img