5 Star Fried Rice - 2026

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: 5 ஸ்டார் ப்ரைடு ரைஸ்!

லைஃப் ஸ்டைல் சமையல் புதிது
5 Star Fried Rice - 2026

5 ஸ்டார் ப்ரைடு ரைஸ்
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – ஒரு கப்
கேரட், பீன்ஸ், குடைமிளகாய், காலிஃப்ளவர் சேர்த்து – ஒரு கப்
நெய் – ஒரு ஸ்பூன்
எலுமிச்சைச்சாறு – 2 ஸ்பூன்
சீனி – 1/2 ஸ்பூன்
மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன்
அஜினோமோட்டோ – 1/4 ஸ்பூன்
வெங்காயத்தாள் – 4
உப்பு – தேவைக்கு

செய்முறை
அரிசியை முக்கால் பதமாக வேக வைக்கவும்.
காய்கறிகளை பொடியாக நீட்டமாக நறுக்கவும்.
வாணலியில் நெய் விட்டு காய்கறிகளை போட்டு வதக்கவும். பின்பு சாதத்தை போட்டு உடையாமல் கிளறவும்.
பிறகு எலுமிச்சைச்சாறு, உப்பு, சீனி, மிளகுத்தூள், அஜினோமோட்டோ ஆகியவற்றை போட்டு சாதம் உடையாமல் கிளறவும்.
நறுக்கிய வெங்காயத் தாளை தூவி பரிமாறவும்.

அரிசியை வேக வைக்கும் போது ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டால் சாதம் ஒன்றோடொன்று ஒட்டாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.