அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: கால் வீக்கம், உடல் பொலிவு, சோகை, ஆஸ்துமா…!

Published:

health tips - 2026

கால் வீக்கத்திற்கு..

அமுக்கராக்கிழங்கை அரைத்து தடவலாம்.

வேலிப்பருத்திச் சாறுடன் சுண்ணாம்பைக் குழைத்து வீக்கத்தில் தடவி வர கால் வீக்கம் குறையும்.

பாலின் மேன்மை

பால் ஒரு மிகச்சிறந்த அழகு சாதனம். பால் நிறைய குடித்து வர முகத்தில் எண்ணெய் வழியாது. உதடுகள் பொலிவுடனும் திகழும். தோலை வழவழப்பாகவும் வனப்புடனும் வைத்திருக்கும். கூந்தல் பொலிவு பெறும். பற்களைப் பாதுகாக்கும்.

உடல் பொலிவு பெற…

வெண் தாமரைப்பூ. ஓரிதழ் தாமரை, கீழாநெல்லி மூன்றையும் உலர்த்தி இடித்து சம அளவு எடுத்து கலந்து காலை, மாலை பாலில் சாப்பிட நாடி தளர்ந்தவர்கள் இளமைத் தோற்றம் பெறுவார்கள்.

சோகை நீங்க…

இரும்புச் சத்து குறைந்தால் சோகை நோய் ஏற்படும். உணவில் கொண்டைக் கடலை. பாசிப்பருப்பு. முந்திரி பருப்பு. முருங்கைக்கீரை, முருங்கைக்காய், மாம்பழம், கொய்யா, வெல்லம் ஆகியவற்றை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆஸ்துமா தொந்தரவுக்கு…

வெள்ளைப்பூண்டை தோலுரித்து பாலில் வேகவைத்து சாப்பிட்டு பாலையும் குடிக்க ஆஸ்துமா தொந்தரவு குறையும்.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

Related articles

Recent articles

spot_img