லஞ்ச் பாக்ஸ் கார்னர்: சோயா பிரியாணி!

Soy Biryani - 2026

சோயா பிரியாணி
தேவையான பொருட்கள்
பச்சை அரிசி – 2 டம்ளர்
சோயா – 100 கிராம்
பச்சை மிளகாய் – 6
முழுப்பூண்டு – ஒன்று
இஞ்சி – இரண்டு அங்குல அளவு
பட்டை – சிறிது
கிராம்பு – 6
எண்ணெய் – 4 கரண்டி
கொத்தமல்லி – மேலே தூவுவதற்கு சிறிது
உப்பு – 5 தேக்கரண்டி

செய்முறை
பூண்டினை தோல் உரித்து கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி அரைப்பதற்கு இலகுவாக நறுக்கிக் கொள்ளவும். அரிசியை நீர் விட்டு களைந்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
தேவையானப் பொருட்கள்
பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், பட்டை, கிராம்பு அனைத்தையும் ஒன்றாய் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் அல்லது அம்மியில் இட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுது அரை கப் அளவு இருக்கும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்தவுடன் அதில் சோயாவைப் போட்டு, 2 தேக்கரண்டி உப்பு போட்டு 2 நிமிடம் வேக விடவும். வெந்தவுடன் சோயாவை எடுத்து ஆறவைத்து பிறகு நீரை பிழிந்து விடவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த விழுதைப் போட்டு சில நொடிகள் வதக்கவும். பச்சை வாடை சற்று போனவுடன் வேகவைத்து எடுத்து வைத்துள்ள சோயாவை அதில் சேர்த்து சிறிது நேரம் நன்கு வதக்கவும்.

இரண்டு டம்ளர் அரிசிக்கு 4 டம்ளர் நீர் எடுத்து குக்கரில் ஊற்றி, அரிசியையும், வதக்கின சோயா கலவையையும் அதில் போடவும். அத்துடன் மீதமுள்ள 3 தேக்கரண்டி உப்பையும் சேர்த்து சற்று கிளறிவிட்டு, குக்கரை மூடி வேக விடவும். ஒரு டம்ளர் தண்ணீரைக் குறைத்துக் கொண்டு மாற்றாக ஒரு டம்ளர் தேங்காய் பால் சேர்க்கலாம்.

குக்கரில் இரண்டு அல்லது மூன்று விசில் வந்தவுடன் இறக்கி, ஆவி அடங்கியவுடன் எடுத்து, விரும்பினால் சிறிது நெய்விட்டுக் கிளறி, சிறிது கொத்தமல்லி தழையினை மேலேத் தூவவும். எளிதான, சுவையான சோயா பிரியாணி தயார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories