சின்ன வெங்காய சாதம்
தேவையானவை:
காய்ந்த மிளகாய் – 20 (இரண்டாக கிள்ளிக்கொள்ளவும்),
கடுகு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், புளி விழுது – 2 டீஸ்பூன்,
அரிசி – ஒரு கப்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
சின்ன வெங்காயம் – ஒரு கப்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பிரஷர் குக்கரில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகைப் போடவும். வெடித்ததும், கடலைப் பருப்பு, மிளகாய்துண்டுகள், புளிவிழுது, உப்பு, மஞ்சள்தூள், அரிசி சேர்த்து 5 கப் (1:5 என்ற விகிதத்தில்) தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். உரித்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து குக்கரை மூடி 4 விசில் வரும்வரை சமைக்கவும். காரசாரமான சின்ன வெங்காய சாதம் ரெடி.