
நீங்கள் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் ப்ரவுஸர்-ஐ பயன்படுத்துகிறீர்கள் என்றால், இந்திய அரசின் இந்த ‘அலெர்ட் மெசேஜ்’ உங்களுக்கானது தான்!
ஒருவேளை மைக்ரோசாஃப்ட் எட்ஜ்-ஐ நீங்கள் பெரிதும் பயன்படுத்தாவிட்டால் கூட, அது உங்கள் கம்ப்யூட்டரில் / லேப்டாப்பில் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருந்தாலும் கூட, இந்த எச்சரிக்கை உங்களுக்கு பொருந்தும்.
இந்திய அரசாங்கத்தின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (Ministry of Electronics and Information Technology) கம்ப்யூட்டர் எமெர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (Computer Emergency Response Team; CERT-In) ஆனது மைக்ரோசாஃப்ட் எட்ஜில் ‘அதிக ஆபத்துள்ள’ பல பாதிப்புகளைக் கண்டறிந்துள்ளது.
நீங்கள் மைக்ரோசாஃப்ட் எட்ஜின் 98.0.1108.55 வெர்ஷனை விட பழைய ப்ரவுஸர்-ஐ பயன்படுத்தும் ஒரு யூசர் என்றால், இந்த இந்திய அரசாங்கத் துறையின் எச்சரிக்கை உங்களுக்கானது தான்.
வெளியான அறிக்கையின்படி, மைக்ரோசாஃப்ட் எட்ஜின் பழைய வெர்ஷன்களில், சைபர் கிரிமினல்கள் மற்றும் ஹேக்கர்கள், யூசர்களின் டிவைஸ்களை அணுக அனுமதிக்கும் பல சிஸ்டம் வல்னபரிட்டிஸ் (system vulnerabilities) உள்ளன.
மைக்ரோசாஃப்ட் எட்ஜில் உள்ள இந்த ‘பாதிப்புகள்’ஆனது ஒரு யூசர் இந்த ப்ரவுஸரைப் பயன்படுத்தாதபோதும் கூட ஃபைல் மேனேஜருக்கான அணுகலை அனுமதிக்கிறது.
மேலும் எட்ஜின் டேப் க்ரூப்களில் மெமரி பஃபர் ஓவர்ஃப்ளோ ஆவது, யூஸர் ஆக்டிவ் ஆக இல்லாதபோதும் கூட வெப்ஸ்டோர் ஏபிஐ-க்கான அணுகல் போன்ற பிற சிக்கல்களை மைக்ரோசாஃப்ட் எட்ஜ்-இன் பழைய வெர்ஷன் சந்தித்து வருகிறது.
மோசமான விஷயம் என்னவென்றால். இந்த சிக்கல்கள் ஆனது, சைபர் கிரிமினல்கள் மற்றும் ஹேக்கர்களுக்கு, பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை எளிதாகக் கடந்து செல்ல உதவும்.
ஆக மைக்ரோசாஃப்ட் எட்ஜ் யூசர்ர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?
அதிகப்படியான ஆபத்துள்ள இந்த வல்னபரிட்டியை தவிர்ப்பதற்கான ஒரே தீர்வு, உங்கள் ப்ரவுஸர்-ஐ லேட்டஸ்ட் மைக்ரோசாப்ட் எட்ஜ் ஸ்டேபிள் சேனலுக்கு (வெர்ஷன் 98.0.1108.55) அப்டேட் செய்வதே ஆகும்.
மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி அப்டேட் டாக்-இன் படி, “இந்த அப்டேட் க்ரோமியம் (Chromium) ப்ராஜெக்டின் சமீபத்திய செக்யூரிட்டி அப்டேட்களை உள்ளடக்கியது. மேலும் இந்த அப்டேட்டில், க்ரோமியம் டீமால் புகாரளிக்கப்பட்ட CVE-2022-0609க்கான பக் ஃபிக்ஸ்-களும் (Bug Fixes) செய்யப்பட்டுள்ளன.
பக்-ஐ ஃபிக்ஸ் செய்வது மட்டுமின்றி, மைக்ரோசாஃப்ட் எட்ஜின் இந்த புதிய அப்டேட் ஆனது புதிய எட்ஜ் பார் என்கிற மேம்படுத்தப்பட்ட செக்யூரிட்டி மோட் உடன் வருகிறது. எனவே தான், கம்ப்யூட்டர் எமெர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் ஆனது உங்கள் மைக்ரோசாஃப்ட் ப்ரவுஸர்-ஐ லேட்டஸ்ட் வெர்ஷன் உடன் அப்டேட் செய்யச்சொல்லி எச்சரித்து உள்ளது.
மைக்ரோசாஃப்ட் எட்ஜ் ப்ரவுஸர்-ஐ லேட்டஸ்ட் வெர்ஷன் உடன் அப்டேட் செய்வது எப்படி?
- முதலில், உங்கள் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் ப்ரவுஸர்-ஐ திறக்கவும்.
- பின்னர், உங்கள் ப்ரவுஸர் ஸ்கீனின் மேல் வலது மூலையில் உள்ள ‘த்ரீ டாட்’ ஆப்ஷனை (மூன்று புள்ளிகளை) கிளிக் செய்து பின் ‘செட்டிங்ஸ்’ விருப்பத்திற்குள் நுழையவும்.
- இப்போது ஹெல்ப் அன்ட் ஃபீட்பேக் (Help and Feedback) என்பதற்கு செல்லவும்.
- பிறகு, செட்டிங்ஸில் ‘அபௌட் மைக்ரோசாஃப்ட் எட்ஜ்’ (About Microsoft Edge) என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் ஆனது அப்டேட் ஆகியுள்ள நிலையில் இருப்பதைக் காட்டினால், நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை.
- மாறாக ‘அப்டேட் உள்ளது’ என்கிற நோட்டிஃபிக்கேஷன் இருந்தால், டவுன்லோட் என்பதைக் கிளிக் செய்து லேட்டஸ்ட் அப்டேட்டை இன்ஸ்டால் செய்யவும்.
6: பின்னர் மைக்ரோசாஃப்ட் எட்ஜை ‘ரீலான்ச்’ (Relaunch) செய்யவும். அவ்வளவு தான், உங்கள் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் ப்ரவுஸர் ஆனது லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் ஆகி இருக்கும்.