spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?வாட்ஸ்அப்பில இந்த அம்சங்கள் பற்றி தெரியுமா..?

வாட்ஸ்அப்பில இந்த அம்சங்கள் பற்றி தெரியுமா..?

- Advertisement -

வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பயனர்களுக்காகப் புத்தம் புதிய பல அம்சங்களை அதன் பிளாட்ஃபார்மில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

இதன் மூலம் தொடர்ந்து வாட்ஸ்அப் புதுப்பித்தலில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டில், பணத்தை மாற்றுவதற்கான ஏற்பாடு உட்பட சில குறிப்பிடத்தக்க அம்சங்களை நிறுவனம் அதன் தளத்தில் சேர்த்தது.

நீங்கள் ஒரு வாட்ஸ்அப் பயனர் என்றால், இப்போது உங்களுக்குப் பயன்படுத்தக் கிடைக்கும் அற்புதமான வாட்ஸ்அப் அம்சங்களைப் பற்றி தெரிந்துகொள்வது இன்னும் உங்கள் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும்.

வாட்ஸ்அப் சமீபத்தில் அறிமுகம் செய்துள்ள இந்த அம்சம் உண்மையில் வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்கும், லேப்டாப்பில் அதிக நேரம் செலவழிக்கும் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

உங்கள் லேப்டாப் அல்லது கணினியில் Windows / Mac இல் இயங்கும் வாட்ஸ்அப்பை நீங்கள் நிறுவி இருந்தால் இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் இனி
உங்களின் மடிக்கணினிகளில் இருந்தே நீங்கள் நேரடியாக வாட்ஸ்அப் அழைப்புகளை பயன்படுத்தலாம்.

வாட்ஸ்அப் அழைப்புகள் என்று இங்கு பொதுவாக குறிப்பிடப்பட்டது, உங்களிடைய வாட்ஸ்அப் குரல் அழைப்பு மற்றும் அழைப்பு இரண்டையும் தான். இனி உங்கள் போன் அருகில் இல்லாவிட்டாலும் லேப்டாப் மூலம் வாய்ஸ் கால்ஸ் அழைப்பு மற்றும் கால்ஸ் அழிப்புகளில் கலந்துகொள்ளும் வசதியை வாட்ஸ்அப் சேர்த்துள்ளது. இந்த அம்சம் அழைப்புகளைப் பெற தொலைபேசியைப் தேடுவதில் இருந்து விடுவிக்கிறது.

யூனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் சிஸ்டத்தின் (யுபிஐ ) அடிப்படையில் பயனர்கள் பணத்தை அனுப்பவும் பெறவும் WhatsApp பேமெண்ட் அனுமதிக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கும் இந்த ஆண்டு இந்த அம்சம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2021 இல் வெளியிடப்பட்ட மிகவும் பயனுள்ள அம்சங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த அம்சத்துடன் பயனர்கள் ஐபோனிலிருந்து ஆண்ட்ராய்டுக்கு உரையாடல்களைத் தடையின்றி நகர்த்தலாம், ஆனால் இந்தப் பரிமாற்றத்தை முடிக்க உங்களுக்கு USB-C கேபிள் தேவை. இந்த ஏற்பாடு ‘செட்டிங்ஸ்’ என்பதன் கீழ் உள்ளது.

தங்கள் மீடியாவை இரண்டு முறை பார்க்க விரும்பாதவர்கள் மீடியா கோப்புகளை ‘View only once’ என அனுப்பலாம். படங்கள்/க்களை ‘ஒருமுறை மட்டும் பார்க்கவும்’ என அனுப்ப, மீடியா கோப்பை அனுப்பும் முன் ‘1’ ஐகானைத் தட்டவும். உங்கள் மெசேஜ்ஜை பெரும் ரிசீவர் ஒரு முறை மட்டுமே இந்த மீடியா பைல்களை பார்க்க முடியும். மெசேஜ்ஜை பார்த்த பிறகு படம் தானாகவே மறைந்துவிடும்.

நீங்கள் சத்தமில்லாத பின்னணியில் இருந்து வைப் பதிவுசெய்யும்போது, ​​​​பின்னணி சத்தம் விரும்பிய பெறுநரால் கேட்கப்படுவதை நீங்கள் விரும்பாதபோது, ​​​​WhatsApp இன் முடக்கு அம்சம் கைக்கு வரும். வாட்ஸ்அப் அரட்டைகளில் க்களைப் பகிர்வதற்கு முன் அவற்றை முடக்கலாம்.

உங்கள் லேப்டாப், பிசி அல்லது டேப்லெட்டில் ஒரே நேரத்தில் WhatsApp ஐப் பயன்படுத்தலாம். இந்த மல்டி டிவைஸ் அம்சம் பல சாதனங்களில் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துவதை எளிதாக்குகிறது.

வாட்ஸ்அப் டெவலப்மென்ட் டிராக்கரான WABetaInfo இன் படி, உங்கள் சுயவிவரத்திற்கு புதிய Facebook போன்ற அட்டைப் படத்தைச் சேர்க்கும் வசதியை அப்ளிகேஷன் விரைவில் கொண்டிருக்கும். இது முதன்மையாக WhatsApp வணிக கணக்குகளுக்கானதாக இருக்கும். தனிப்பட்ட WhatsApp கணக்கில் இந்த அம்சம் உள்ளதா என்பது தெரியவில்லை.

சமீபத்தில் வெளியான தகவலின் படி, வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன் 2.22.5.4 என்ற வாட்ஸ்அப் அப்டேட்டில் இந்த சோதனை அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளதாக WABetaInfo அறிக்கை தெரிவிக்கிறது.

இது தேர்ந்தெடுக்கப்பட்ட பீட்டா பயனர்களுக்கு மட்டும் இந்த புதிய குரல் அழைப்பு இடைமுகத்தைக் வழங்குகிறது என்று WABetaInfo அறிக்கை தெரிவிக்கிறது. புதிய இடைமுகம் பயன்பாட்டை மிகவும் அழகியல் மற்றும் செயல்பாட்டில் எளிதாக்குவதற்கு உதவுகிறது என்று WABetaInfo கூறியுள்ளது.

ஒட்டுமொத்தமாக, WABetaInfo பகிர்ந்த படத்திலிருந்து, இடைமுகம் நவீனமாகவும் நேர்த்தியாகவும் மாற்றப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. இந்த புதிய அம்சத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்கள் மேற்கொள்ளும் குரல் அழைப்புகளுக்கான அலைவடிவங்களை அறிமுகம் செய்துள்ளது என்று கூறப்படுகிறது.

குழு குரல் அழைப்பில் யார் பேசுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்காக, வாட்ஸ்அப் அலைவடிவங்களை இப்போது கொண்டு வந்துள்ளதாகத் தெரிகிறது.

வாட்ஸ்அப்பில் விதவிதமான ஸ்டைல்களில் எப்படி மெசேஜ் செய்யலாம் என்பதை காணலாம்.

நீங்கள் ஆண்ட்ராய்டு பயனராக இருந்தால், நீங்கள் செய்யவேண்டியது முதலில் நீங்கள் மாற்ற விரும்பும் மெசேஜை தேர்ந்தெடுத்து அதனை சிறிது அழுத்திப் பிடிக்கவும், பின்னர் மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்யவும். இதனை செய்தவுடன் நீங்கள் விரும்பும் போல்ட், இட்டாலிக், ஸ்ட்ரைக்த்ரூ மற்றும் மோனோஸ்பேஸ் போன்ற ஆப்ஷன்கள் வரும் அதில் உங்களுக்கு விருப்பமான ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

இந்த வழியில் நீங்கள் செய்ய விரும்பவில்லை என்றால் வேறொரு மாற்று வழியுள்ளது, அதனை பின்பற்றி எழுத்துக்களை மாற்றலாம்.

வாட்ஸ்அப்பில் மெசேஜை இட்டாலிக் ஸ்டைலில் மெசேஜின் இருபுறமும் அடிக்கோடினைச் சேர்க்கவும், எடுத்துக்காட்டு _ text_. அதனை தொடர்ந்து மெசேஜை போல்ட் ஸ்டைலில் மாற்ற, மெசேஜிங் இருபுறமும் நட்சத்திரக் குறியைச் சேர்க்கவும்,

எடுத்துக்காட்டு text . ஸ்ட்ரைக்த்ரூ ஸ்டைலுக்கு மாற்ற மெசேஜிங் இருபுறமும் ஒரு டில்டைச் சேர்க்கவும். இதுவே நீங்கள் ஐபோன் பயனாளராக இருந்தால், டைப் செய்த மெசேஜை அழுத்தி பிடித்து பின்னர் BIU என்பதைக் கிளிக் செய்யவும்.

பின்னர் அதில் போல்ட், இட்டாலிக், ​​ஸ்ட்ரைக்த்ரூ போன்ற ஆப்ஷன்களை தேர்ந்தெடுக்கவும். டைப்ரைட்டர் ஸ்டைலுக்கு எழுத்துக்களை மாற்ற மெசேஜிற்கு இருபக்கமும் அபோஸ்ட்ரோபிகளைச் சேர்க்கவும், எடுத்துக்காட்டு “‘text”‘.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்கள் வாட்ஸ்அப்பில் ஒவ்வொரு நபரின் சாட்டிற்கும் தனித்தனியான பேக்ரவுண்ட் வால்பேப்பரை வைத்துக்கொள்ளலாம். இதனை செய்ய வாட்ஸ்அப் சாட்டை திறந்து திரையின் மேல் மூலையில் உள்ள மூன்று புள்ளிகளைத் க்ளிக் செய்து அதில் வால்பேப்பர் ஆப்ஷனை தேர்வு செய்யவேண்டும்.

பின்னர் அதில் பிரைட், டார்க், சாலிட் கலர்ஸ் மாறும் மை போட்டோஸ் ஆப்ஷன்கள் காண்பிக்கப்படும். அதில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்து பேக்ரவுண்டு வால்பேப்பராக வைத்துக்கொள்ளலாம். இதே முறையை பின்பற்றி ஒவ்வொருவரின் சாட்டிற்கும் வால்பேப்பரை தேர்வு செய்துகொள்ளலாம்.

செர்ச் மெசேஜ் ஷார்ட்கட்: இந்த அம்சத்தில் ஒரு நபரிடம் பேசிய உரையாடலில் இருந்தும் குறிப்பிட்ட மெசேஜ்ஜை எளிதாக தேடி எடுக்க முடியும். ஏற்கனவே இந்த அம்சம் இடம்பெற்றிருந்தாலும். தற்போது மேம்படுத்தப்பட்ட வடிவில் தரப்படவுள்ளது. இன்று முதல் சில பீட்டா டெஸ்டர்களுக்கு தரப்பட்டுள்ள இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் கிடைக்கும்.

கேமரா மீடியா பார்: ஒரு நபருக்கு எளிய முறையில் வீடியோ மற்றும் புகைப்படங்களை அனுப்புவதற்காக இந்த புதிய அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe