Realmy C30 - 2026

ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி சி30ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ரியல்மி சி30 ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும். பின்பு 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டு அறிமுகமாகும் இந்த ரியல்மி சி30 ஸ்மார்ட்போன்.

ரியல்மி சி30 ஸ்மார்ட்போனில் 13எம்பி கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்பு செல்பீகளுக்கும், வீடீயோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

மேலும் எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

ரியல்மி சி30 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு கோ எடிஷன் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது

ரியல்மி சி30 ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதிää கைரேகை ஸ்கேனர் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த அட்டகாசமான ரியல்மி சி30 ஸ்மார்ட்போன் வெளிவரும்.

மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது.

மேலும் 2,408×1,080 பிக்சல் தீர்மானம், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் Unisoc T612 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குறிப்பாக Realme UI R Edition சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மோனோக்ரோம் சென்சார் + 2எம்பி போர்ட்ரெயிட் சென்சார்என மொத்தம் மூன்று கேமராக்கள்
பொருத்தப்பட்டுள்ளன.

பின்பு செல்பீகளுக்கும், வுடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதேபோல் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending