வாழ்க்கை நொடியில் மாறலாம்-துபாய் லாட்டரியில் ரூ.33 கோடி பரிசு பெற்ற இந்திய ஏழை..

FB IMG 1671967457256 - 2026

துபாய் ஆன்லைன் லாட்டரியில் நகைக்கடையில் பணிபுரியும் இந்தியாவை சேர்ந்த டிரைவர் ஒருவருக்கு ரூ.33 கோடி ஜாக்பாட் பரிசாக கிடைத்துள்ளது.

வாழ்க்கை அடுத்த நொடியில் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்பதற்கு உதாரணமாக இந்தியாவின் ஹைதராபாத்தை சேர்ந்த அஜய் ஓகுலா (31) என்பவருக்கு லாட்டரியில் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.4 ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மேய்ச்சல் நிலங்களை பராமரிக்கும் பணிக்காக சென்றவர். தற்போது அங்குள்ள நகைக்கடை நிறுவனத்தில் டிரைவராக பணி புரிந்து வருகிறார்.மாதந்தோறும் 3,200 திர்ஹாம் (அதாவது இந்திய மதிப்பில் ரூ.71,968) சம்பளமாக பெற்று வருகிறார்.இந்நிலையில், சமீபத்தில் நடந்த கிராண்ட் எமிரேட்ஸ் குலுக்கலில், அவருக்கு முதல் பரிசான 15 மில்லியன் திர்ஹாம் பரிசாக கிடைத்துள்ளது.

லாட்டரியில் ஜாக்பாட் அடித்தது குறித்து அஜய் ஓகுலா கூறுகையில்,”நான் ஜாக்பாட் அடித்ததை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. வழக்கமாக என்னுடைய முதலாளியிடம் லாட்டரியில் பணம் கிடைத்தால் எப்படியெல்லாம் வாழ்க்கை மாறும் என்பது குறித்து பேசுவேன். அதற்கு, அவர் தேவையில்லாமல் செலவிடும் பணத்தை அதில் முயற்சி செய்து பார்க்கலாமே என கூறினார்.

இதனையடுத்தே, எமிரேட்ஸ் டிரா மொபைல் செயலியை டவுன்லோடு செய்து 2 டிக்கெட் வாங்கினேன். லாட்டரியில் வென்றதாக இ-மெயில் வந்தபோது சிறிய தொகை என எண்ணியிருந்தேன்.அதன் மதிப்பை அறிந்த போது, உறைந்து போய்விட்டேன். வார்த்தையே வரவில்லை.

இந்தத் தொகையைக் கொண்டு சொந்தமாக கட்டுமான நிறுவனம் துவங்க உள்ளேன். மேலும் ஒரு அறக்கட்டளையை உருவாக்க உள்ளேன்.எனது கிராமத்தை சுற்றியுள்ள ஊர்களில் உள்ள பலருக்கு அடிப்படைத் தேவைகளை பெற உதவும். ஜாக்பாட் அடித்ததை எனது அம்மாவும், உடன்பிறந்தவர்களும் நம்பவே இல்லை. இப்போது நான் செய்திகளில் வருவதால் அவர்கள் நிச்சயம் நம்புவார்கள்.’ அவர் கூறியுள்ளார்.இதே குலுக்கலில், அஜய் ஓகுலாவுக்கு அடுத்ததாக 50 வயதான பிரிட்டனை சேர்ந்த பவுலா லீச் என்பவர், 77,777 பில்லியன் திர்ஹாமை வென்றார். 3 குழந்தைகளின் தாயான இவர், சுமார் 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மனித வள நிபுணராக பணியாற்றி வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories