ரஜினி நடித்துள்ள காலா படத்தில் இடம்பெற்றுள்ள ‘செம்ம வெயிட்டு’ சிங்கிள் டிராக்கை தயாரிப்பாளர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி காந்த் நடிக்கும் படம் காலா. இந்தப் படத்துக்கும் மும்பைக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி, படத்தின் பெயரைக் கேட்டதில் இருந்தே பலருக்கும் எழுந்தது. அதற்குப் பதிலளிக்கும் வகையில் படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித், ”காலா திரைப்படம் மும்பைவாழ் திருநெல்வேலி மக்களின் கதைக்களம்’’ என்று தெரிவித்திருந்தார்.
காலா படம் வரும் ஜூன் 7-ம் தேதி ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னர், ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழ் திரையுலகினரின் வேலைநிறுத்தம் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக காலா படத்தில் இடம்பெற்றுள்ள ‘செம்ம வெயிட்டு’ சிங்கிள் டிராக் மே 1ஆம் தேதி வெளியிடப்படும் என தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்திருந்தார். அதன்படி, காலா படத்தின் செம்ம வெயிட்டு சிங்கிள் டிராக்கை தனுஷ் வெளியிட்டுள்ளார்.