தமிழ் மற்றும் தெலுகு திரையுலகை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியவர் தெலுகு நடிகை ஸ்ரீரெட்டி, ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி, ஸ்ரீகாந்த், சந்தீப் கிஷன், லாரன்ஸ் என பலர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி தமிழ்த் திரையுலகை பரபரப்புக்கு உள்ளாக்கினார். தொடர்ந்து, தனக்கு வாய்ப்பு கொடுத்தால் தன் திறமையை நிரூபிப்பதாகக் கூறி, ராகவா லாரன்ஸுடன் மல்லுக்கு நின்றார்.
இப்படி தமிழ், தெலுகு திரையுலகை பரபரப்புக்கு உள்ளாக்கிய ஸ்ரீரெட்டி, பின்னர் சிறிது நாளாக மிகவும் அடக்கி வாசித்து வருகிறார்.
இந்நிலையில் தாம் முன்னரே சென்னையில்தான் குடியேறுவேன் என்று கூறியபடி தற்போது சென்னைக்கே குடிவந்துவிட்டார். இது குறித்த புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். ஆனால் அவர் ஏதோ சொந்த வீடு வாங்கி இங்கே வந்து விட்டது போல் சிலர் கேள்வி கேட்க, இல்லை.. வாடகைக்கு தான் வந்துள்ளேன் என்று பதில்வேறு பகிர்ந்துள்ளார்.




