பிரேமம் மலையாள மொழி படத்தின் மூலம் பிரபலமானவர் சாய்பல்லவி. இவர் தமிழில் ஏ எல் விஜய் இயக்கத்தில் தியா என்ற படத்தில் அறிமுகமானார்.
சாய்பல்லவிக்கு தியா என்ற இந்தப்படம் தோல்விப் படமாகவே அமைந்தது! இந்நிலையில் அவர் மாரி 2 மற்றும் என் ஜி கே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்கள் சாய் பல்லவி க்கு ஓரளவு நம்பிக்கையை கொடுத்துள்ளது.
தோல்விப் படமாக அமைந்த தியா குறித்து சாய்பல்லவி கூறுகையில் இந்த படத்தில் நான் நடிக்க முடிவு செய்தது மிகப் பெரிய தவறு என்பதை உணர்ந்தேன் என்று மனம் வருந்திக் கூறியுள்ளார்
இந்தப் படத்தில் நடித்தபோதுதான் ஏஎல் விஜய்க்கும் சாய் பல்லவி க்கும் காதல் என்றும் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அண்மைக் காலமாக கிசுகிசுவும் பரவி வந்தது!




