இன்று முக்கியமான போட்டி… ஆஸி.,யுடன் மல்லுக்கட்டும் இந்தியா!

லைஃப் ஸ்டைல் விளையாட்டு

indvsaus - 2026

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முக்கியமான போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியா அணிகள் மோதுகின்றன!

உலகக் கோப்பைத் தொடர் கடந்த மாதம் 30 ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 12 போட்டிகள் முடிந்துள்ளன. இன்று 13வது போட்டியாக இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன

இந்த உலகக் கோப்பையில் இரு அணிகளும் தாங்கள் சந்தித்த போட்டிகளில் இதுவரை தோற்கவில்லை. ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தானையும் வெஸ்ட் இண்டீஸ் அணியையும் வென்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுடனான போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணிக்கு இது இரண்டாவது போட்டியாகும்.

இரு அணிகளும் சம பலம் கொண்ட அணிகள் தான் என்பதால் ரசிகர்கள் இந்தப் போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இதுவரை இவ்விரு அணிகளும் உலகக்கோப்பையில் 11 முறை மோதியுள்ளன. அதில் 8 முறை ஆஸ்திரேலியாவும் 3 முறை இந்தியாவும் வென்றுள்ளது.

இந்தப் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்குத் தொடங்குகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.