விநாயகர் சிலை ஒன்றின் முன்னர் ஆபாசமாக தொடை தெரியும் படி கால்களை விரித்து நின்றபடி போஸ் கொடுத்துள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த். இது சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பைக் கொடுத்துள்ளது.
‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அந்தப் படத்தின் வெற்றியின் மூலம் மேலும் பிரபலமான யாஷிகா, பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் இரண்டில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்றார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் மகத்தை காதலிப்பதாக கூறி சர்ச்சையில் சிக்கினார். பின்னர் எல்லாம் நடிப்புதான் என்று ஆகி, தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்துவருகிறார்!
இதனிடையே தனது ஹாட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அவ்வப்போது ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார் யாஷிகா. இந்நிலையில், அவர் நேற்று வெளியிட்ட ஒரு படம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
யாஷிகா தற்போது விநாயகர் சிலை முன்பு மிக மோசமாக போஸ் கொடுத்த படி வெளியிட்ட புகைப்படம்தான் பலரும் திட்டித் தீர்க்கக் காரணமாக அமைந்திருக்கிறது.
இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கடவுள் முன்பு இப்படியா போஸ் கொடுப்பது என கமெண்ட் செய்துள்ளனர்.
ஆயிரம் இருந்தாலும் கடவுள வழிபடுற ஒரு இடத்துல இப்படி அனாகரிகமா நிக்கிறது சரி இல்லை… என்று ஒருவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.
குறைந்த பட்சம் கடவுளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று ஒருவர் கருத்திட்டிருக்கிறார்.
மூதேவி ஆப்போசிட் சைடுல சாமி இருக்கு.. இப்படியா போஸ் கொடுப்ப என்று ஒருவர் திட்டியிருக்கிறார்.
அப்படியே பப்ளிக்கா… அதையும் செய்துடலாம் என்று சிலர் கருத்திட்டிருக்கிறார்கள்.
இப்படி இடம்,பொருள், ஏவல் தெரியாமல் விநாயகர் சிலை முன்பு தொடை தெரிய ஆபாச போஸ் கொடுத்தது மட்டுமின்றி அதை வலைதளத்திலும் போட்டு, பரப்பி வரும் யாஷிகா ஆனந்துக்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப் பட்டு வருகின்றன.




