பெண்களுக்கு அதிர்ச்சி தந்த தங்கச் செய்தி!

Published:

gold shop - 2026

தங்கத்தின் விலை கடந்த இரு நாட்களாகக் குறைந்து வந்த நிலையில் புதன் கிழமை இன்ரு மீண்டும் அதிகரித்துக் காணப்பட்டது. இன்று ஒரே நாளில் சவரன் ரூ.504 உயர்ந்து, மீண்டும் 26 ஆயிரத்தைக் கடந்திருக்கிறது.

சென்னை, தங்கம் – வெள்ளி சந்தையில் இன்றைய காலை நேர வர்த்தகத்தின் படி, 22 காரட் ஒரு கிராம் ஆபணரத் தங்கத்தின் விலை ரூ.3,279க்கும், சவரன் ரூ.504 உயர்ந்து ரூ.26,232க்கும், 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.34,370க்கும் விற்கப் பட்டது.

வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் சில்லறை விலை 30 காசுகள் அதிகரித்து ரூ.40.70 க்கு விற்பனையானது.

ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 63 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் 504 ரூபாய் உயர்ந்து 26 ஆயிரத்து 232 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

சர்வதேச சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக கடந்த 10 வாரங்களில் ஆபரண தங்கத்தின் விலை 12 சதவீதம் வரை விலை ஏற்றம் கண்டுள்ளது.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!

அமெரிக்க நாணயமான டாலர் விலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, சர்வதேச அளவில் தங்கத்தின் விலை அதிகரித்தாலும், உள்நாட்டு சந்தையில் தேவைகள் அதிகரித்து வருவதும் முக்கிய காரணமாக உள்ளது.

குறிப்பாக, இந்தியாவில் அடுத்தடுத்து பண்டிகை காலம் தொடங்க உள்ள நிலையில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு காரணமாகவும் விலை ஏற்றம் கண்டு வருவதாக கூறப்படுகிறது.

Related articles

Recent articles

spot_img