திருமணங்கள் மிகவும் மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள் ஆகும். ஒரு திருமணம் நடக்கும்போது, அதில் மணம் முடிக்கும் இருவர் மட்டுமல்லாமல், அவர்களைச் சார்ந்த பலரும் மகிழ்ந்து கொண்டாடுகிறார்கள்.
அமர்க்களமான நடனங்கள் இல்லாமல் திருமணங்கள் நிறைவு பெறுவதில்லை. முன்னர், திருமணத்திற்கு வரும் நபர்களோ அல்லது கலைஞர்களோதான் நடமாடுவார்கள். ஆனால், இந்த நாட்களில், மணமகனும், மணமகளுமே களத்தில் இறங்கி விடுகிறார்கள்.
தங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணத்தை நினைவில் இருக்கும் வகையில் அவர்கள் மனதில் நிலைநிறுத்திக்கொள்ள விரும்புகிறார்கள்.
இந்த வீடியோவைப் பார்த்தால், இந்த திருமணம் (Marriage) இந்தியாவிற்கு வெளியே, ஆனால் இந்திய பாணியில் நடத்தப்பட்ட திருமணம் என்பதை யூகிக்க முடிகிறது. இந்த பதிவில் உள்ள தலைப்பின் மூலம், மணமகள் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர் என்றும், அவர் இந்திய மரபுகளின்படி, ஒரு இந்தியரை மணக்கிறார் என்றும் தெரிகிறது.
முதலில், மணமகன் மேள தாளத்துக்கு ஏற்ப மணமகளுக்கு முன்னால் நடனமாடத் தொடங்கினார். மணமகன் நடனமாடுவதைப் பார்த்து, மணமகளால் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவரும் இடுப்பை அசைத்து சில துள்ளலான நடன அசைவுகளுடன் தன் ஆட்டத்தைத் துவக்குகிறார்.
பின்னர் இருவருமாக சேர்ந்து, மேளத்தின் தாளத்திற்கு ஏற்ப அட்டகாசமாக நடனமாடி அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்துகிறார்கள்.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் (Instagram) ஷிவம் என்றவரின் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவின் தலைப்பு, ‘இந்தியாவும் ஆப்பிரிக்காவும் ஒன்றாக சந்திக்கும் போது …’ என்று வைக்கப்பட்டுள்ளது.
இந்த வேடிக்கையான நடன வீடியோ வைரலாகியுள்ளது (Viral Video). இந்த வீடியோ 148,274 க்கும் மேற்பட்ட லைக்குகளையும், பல கமெண்டுகளையும் குவித்துள்ளது. கமெண்டுகளில் மக்கள் இந்த உற்சாகமான தம்பதியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
யாரைப் பற்றியும் கவலைப்படாமல் இந்த ஜோடி அதிரடியாக நடனமாடுவதுதான் இந்த வீடியோவின் சிறந்த பகுதியாகும்.
திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் இந்த நடனத்தை விரும்பி ரசித்தனர். மணமகனும், மணமகளும் சரியான ஜோடி என அனைவரும் வாழ்த்தினர்.