பிகில்… ஜூலை 23ல் சிங்கப்பெண்ணே பாடல்… வர்தாம்!

Published:

Bigil 1st Single Singap Penney From July 23a - 2026

பிகில் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குனர் அட்லீ, நடிகர் விஜய் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளனர். அந்தப் படமே ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் பிகில். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள படம் இது. எனவே பாடல்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்தப் படம், பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இதில், கால்பந்து பயிற்சியாளராக நடித்திருக்கிறார் விஜய்.

விஜயின் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து படத்தில் இடம்பெற்ற சிங்கப் பெண்ணே என்ற பாடல் இணையத்தில் கசிந்தது.

இந்நிலையில் சிங்கப் பெண்ணே பாடல் வரும் ஜூலை 23-ஆம் தேதி வெளியாகும் என்று படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார்.

இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், ‘இந்தப் பாடல் நாட்டின் அனைத்து மகள்களுக்கும் சமர்ப்பணம்’ என்றும் அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ளார்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு; பக்தியும் பாதுகாப்பும்!

Related articles

Recent articles

spot_img