அனைத்து உலகங்களிலும் ஹரியின் நாமத்தை சொல்லி தடையின்றி சென்று வரும் நாரத மகரிஷியின் அம்சமாக , நமகெல்லாம் ராம நாமத்தின் பெருமையை சுட்டி காட்ட அவதாரம் செய்த அவரது அடி தொழுது , அவரது சரித்திரத்தை தொடர்வோம் .
சுவாமிகளின் குருகுலம் இசை தேர்ச்சி
சுவாமிகள் திருவையாறு அரச வேத பாடசாலயில் சில காலம் படித்ததாக தெரிகிறது.
சுவாமிகளின் தனது சிறுவயதிலேயே கீர்த்தனை புரிவதில் வல்லவராக இருப்பதை அவரது தந்தையார் இராம பிருமம், கண்டு , எழுதி வைத்து அவைகளை ஊர் பண்டிதர்கள் முன்பாக சிறுவனான சுவாமிகளை பட வைத்து ஊக்குவித்தனர் ,
வறுமையும் பல வித குடும்ப சூழல் காரணமாக சுவாமிகள் ஸோண்டி வேங்கடரமணய்யாவிடம் சில மாதங்களே சங்கீதம் பயின்றார் (ஸோண்டி வேங்கடரமணய்யா மற்றும் அவரது தந்தை ஸுப்பைய்யாவும் தஞ்சாவூர் அரச சபை ஆஸ்தான விதவானாக புகழ் பெற்று விளங்கியவர்கள் )
தனது குருவிடம் பெரிதாக இவரால் கால அவகாச குறைவால் கற்று கொள்ள இயலவில்லை .
சுவாமிகளின் தாய் வழி தாத்தா “வீணை காளஹஸ்தி அய்யா பரகதி அடைந்து பிறகு அவர் எழுதி வைத்திருந்த பல இசை நூல்களை தானே படித்து அவற்றில் தேர்ச்சி அடைந்தார் ..
வறுமையும் இவரது சகோதர்களின் துர்குணம் இவரது வாழ்வில் பல தொல்லைகளை அளித்தும் அவர் விடா முயற்சி கொண்டவராக இருந்திருக்கிறார் , அதற்க்கு அவர் தந்தை உறுதுணையாக இருந்திருப்பது இறைவன் சித்தமே.
சுவாமி வாழ்ந்த காலத்திலேயே அவரது புகழ் தென்னகம் எங்கும் பரவி இருந்தது, பலர் அவரது பக்தி பஜனைகளை கேட்க விரும்பினர் .
சென்னையை சேர்ந்த வணிகர் கோவூர் சுந்தர முதலியார் என்கிறவர் தியாகராஜரை தனது கிராமத்துக்கு வரவழைக்க வேண்டும் என்று விருப்பி , தியாகராஜரின் தந்தை இராம பிருமமத்தின் நண்பரும் நூறு வயது பிராயத்தரும் காஞ்சீபுரம் உபநிஷத் பிரம்மம் என்கிற பெரியவரை மூலமாக கடிதம் எழுத வைத்து அழைத்தார்.
காஞ்சீபுரம் செல்லும் வழியில் ஸ்ரீரங்கம் மற்றும் பல திவ்ய தேசங்களில் உறையும் பல சுவாமிகளின் மீது பல கீர்த்தனைகளை இயற்றினார் .
ஸ்ரீரங்கம் சித்திரை தேர் முதல்நாள் தங்க குதிரை வாகனத்தை தெற்கு சித்திரை வீதி மேல சித்திர வீதி முனையில் கும்பலுக்கு நடுவில் சிக்கி தரிசிக்க முடியாமல், பெருமாள், ஒருவர் மூலமாக ஆவேசம் வந்து தனது பக்தர் நிற்பதை சுட்டி காட்டி , காத்திருந்து இவருக்கு தரிசனம் குடுத்த விசயத்தை எனது ஆசான் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ கிருஷ்னமாச்சாரியார் சுவாமிகளின் தெலுங்கு கீர்த்தனைகளை சுட்டி காட்டி விவரமாக எழுதி இருக்கிறார் .
- விஜயராகவன் கிருஷ்ணன்