December 5, 2025, 7:22 PM
26.7 C
Chennai

சாகித்ய அகாடமி விருது..! இந்தியில் இருந்ததால் புறக்கணிப்பாரா முகமது யூசுப்?!

kolachal yoosuf - 2025

மீண்டும் இப்போது ’போர்’ அடிக்கும் தமிழ்ப் போரை கையில் எடுத்திருக்கிறார்கள் திராவிர சிந்தனையில் ஊறியவர்கள் மற்றும் சார்பு கட்சிகள், ஊடகங்கள்!

தமிழில் மொழி பெயர்ப்புக்கான சாஹித்ய அகாடமி விருதினைப் பெற்றிருக்கிறார் குளச்சல் முகம்மது யூசுப். மலையாளத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்ததற்காக அவருக்கு விருது வழங்கப் பட்டிருக்கிறது. அவருக்கு தமிழ்ச் சான்றோர்கள், இலக்கியவாதிகள், இதழாளர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், தனக்கு வழங்கப் படும் விருதில் ஹிந்திச் சொற்கள் இருப்பதால், தமக்கு ஹிந்தி தெரியாது என்பதால், தமிழில் விருது வழங்குமாறு தாம் கோரியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள தகவலில்…

2018 ஆம் ஆண்டின் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கும் விழா வட கிழக்கு மாகாணமான திரிபுராவின் தலைநகர் அகர்தலாவில் 14-6-2019 அன்று நடை பெற்றது. விருதுகளை சாகித்ய அகாதமி தலைவர் வழங்கினார். விருதில் பொறிக்கப்பட்ட எனக்குத் தெரியாத இந்தி எழுத்துக்களை மாற்றி தமிழில் வழங்கும்படி நான் விடுத்த வேண்டுகோளைப் பரிசீலிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

  • என்று தெரிவித்திருக்கிறார். இது குறித்து இதழின் இணைய ஊடகம் ஒன்றில் இந்தி வேண்டாம்; தமிழில் விருது கொடுங்கள்!’ – சாகித்ய அகாடமி மேடையை அதிரவைத்த குளச்சல் முகமது யூசுஃப் என்ற தலைப்பில் ஒரு செய்திக் கட்டுரை வெளியானது. செய்தித் தாள்களிலும், ஹிந்தியில்  விருது இருந்ததால் அதை தமிழில் தர வேண்டும் என்று கூறிய முகமது யூசுப் என்று செய்திகளில் குறிப்பிட்டிருந்தார்கள். இந்நிலையில் அங்கே நடந்தவை குறித்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, சாஹித்ய அகாடமியின் தமிழ் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ள மூத்த பத்திரிகையாளர் மாலன், தனது பேஸ்புக் பதிவில் இவ்வாறு வெளிப்படுத்தியிருக்கிறார்….

பேனைப் பெருமாள் ஆக்குவது எப்படி?

மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்ட நூலுக்காக இந்தாண்டு சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற குளச்சல் யூசுஃப் ” இந்தி வேண்டாம் தமிழில் விருது கொடுங்கள் எனப் பேசி அகாதெமி மேடையை அதிர வைத்ததாக விகடன் செய்திக்குத் தலைப்பிட்டிருக்கிறது

உண்மை என்ன?
1.விருது வழங்கப்பட்ட மேடையில் யூசுப் பேசவே இல்லை. யூசுப் மட்டுமல்ல 24 விருதாளர்களில் எவருமே பேசவில்லை. அகாதெமி விருது வழங்கும் விழாக்களில் விருதாளர்கள் பேசும் வழக்கமில்லை.

இந்த விழாவில் நான் நேரில் கலந்து கொண்டேன். அதனால் என்னால் இதை உறுதியாகச் சொல்ல முடியும்.
என் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கவிஞர் சிற்பியைக் கேட்கலாம்.

எனவே யூசுப் முழங்கியதாகவும் அதனால் அகாதெமி மேடை அதிர்ந்ததாகவும் சொல்வது அப்பட்டமான பொய்

2. விருதாளர்கள் தங்கள் அனுபவங்களை மறுநாள் ஒரு கருத்தரங்கில் பகிர்ந்து கொண்டார்கள். யூசுஃபும் பகிர்ந்து கொண்டார்.அவர் பேச்சின் பிரதி என்னிடம் உள்ளது அதிலும் அப்படி ‘அதிர’ வைக்கும் வரிகள் ஏதும் இல்லை

3. யூசுஃப் அகாதமி தலைவரிடம் அல்ல, செயலரிடம் அல்ல, விழா தொடர்பாக தன்னுடன் தொடர்பில் இருந்த அதிகாரியிடம் விருதைத் தமிழில் தந்தால் நன்றாக இருக்கும் என்ற வேண்டுகோளை (அதிரடி முழக்கத்தை அல்ல) தனிப்பட்ட உரையாடலின் போது தெரிவித்திருக்கிறார். அவர்களும் ஆகட்டும் பார்க்கலாம் என்றிருக்கிறார்கள். விஷ்யம் இவ்வளவே.

4. இன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தி யூசுஃப் தனிப்பட்ட உரையாடலில் கோரியதைக் குறிப்பிட்டுள்ளது “I was given a shield and a citation. Even before I left the stage I noticed that the citation was in Hindi. I showed it to a friend of mine from the Akademi in Tamil Nadu. He asked me not to take it up with the authorities there and asked me to send an email,” Yoosuf told TOI.
அது மட்டுமல்ல, தான் இந்திக்கு எதிரி அல்ல என்றும் சொல்லியிருக்கிறார்
Making it clear that he is not against Hindi, Yoosuf said that he only wanted the citation in Tamil so that he can be happy to see his name on the citation” (Times of India Chennai edition 19.6.19 P.6)

இந்தப் பின்னணியில் விகடன் செய்தியைப் படித்துப் பாருங்கள். விஷமம் தெரியும்

– என்று குறிப்பிட்டிருக்கிறார்.

யூசுஃப் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் விவரம்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories