
காரைக்குடி அமராவதிபுதுாரில் உள்ள ஸ்ரீ ராஜ ராஜன் கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் தின விழா மற்றும் விருது வழங்கும் விழா நடந்தது.
விழாவிற்கு அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் சுப்பையா தலைமை வகித்தார்.மகளிர் கல்லுாரி முதல்வர் சிவக்குமார் வரவேற்றார்.பள்ளி முதல்வர் வாசுகி விருது பெறும் ஆசிரியர்களை அறிமுகம் செய்தார்.
புதுக்கோட்டை மாமன்னர் கலைக்கல்லூரி பேராசிரியர் முனைவர் அய்யாவு காரைக்குடி அழகப்பா கலை கல்லூரி முதல்வர் பொறுப்பு பேராசிரியர் நாகராஜன் ஆகியோர் பேசினர்.
காரைக்குடி தமிழறிஞர் 101 வயதை கடந்த நாராயணசாமிக்கு குறள்பிரியன் விருதும், அழகப்பா கலைக்கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகவும் ஆங்கிலத் துரைத்தலைவராகவும், முதல்வர் பொறுப்பிலும் இருந்து 25 ஆண்டுகள் கல்வி சேவை ஆற்றியிருக்கிற பேராசிரியர் நாகராஜனுக்கு நல்லாசிரியர் விருதும் ராஜராஜன் கல்விக்குழும ஆசிரியர்களுக்கும் விருது வழங்கப்பட்டது.

அழகப்பா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர், பேராசியர் சுப்பையா பேசியபோது … ஆசிரியர் பணி மாணவர்களின் தேடுதல் களமாய் இருக்கவேண்டும்.ஆசிரியர்கள் மாணவர்களின் படைபாற்றலை துாண்டும் ஆயுதமாக இருக்கவேண்டும்.
பல பள்ளி மற்றும் கல்லுாரிகளில் திருக்குறள் குறித்து பேசிய நாராயணசாமி அய்யா முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் திருக்குறள் செம்மல் விருது பெற்றவர் இவருக்கு ராஜராஜன் கல்விக்குழுமத்தின் சார்பில் குறள்பிரியன் விருது வழங்கப்படுகிறது என்றார்.
பள்ளி முதல்வர் வாசுகி விழாவை ஒருங்கிணைத்தார்.முடிவில் துணை முதல்வர் மகாலிங்கம் நன்றி கூறினார்.