vivekaanda birthday celeb - 2026

சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளில்… ஒரு சிந்தனைக் களம்!

நிகழ்ச்சிகள் இந்தியா லைஃப் ஸ்டைல்
vivekaanda birthday celeb - 2026

இளைஞர்கள் சுவாமி விவேகானந்தரின் தத்துவங்களை பின்பற்ற வேண்டும்: ப்ரொபசர் ரஜனீஷ் ஷுக்ல

செய்தித் தொகுப்பு: ஜெயஸ்ரீ எம். சாரி.

“சுவாமி விவேகானந்தர் ஆன்மீகத்தின் மூலமாக இளைஞர்களுக்கு சுய சார்பை பற்றிய ஒரு கண்ணோட்டத்தையும் சமுதாயத்தில் தலைமைப் பண்பை ஏற்பது பற்றிய உத்வேகத்தையும் அளித்தார். இந்தியாவை சுயசார்பு உள்ள நாடாக மாற்ற இளைஞர்கள் சுவாமி விவேகானந்தர் கூறிய கருத்துகளை பின்பற்ற வேண்டும்,”என்று மஹராஷ்டிர மாநிலத்தில் வர்தாவில் உள்ள மகாத்மா காந்தி அந்தராஷ்ட்ரிய ஹிந்தி விஷ்வ வித்யாலயத்தின் துணைவேந்தர் ப்ரொபசர் ரஜனீஷ் ஷுக்ல தெரிவித்தார்.

இன்று விஷ்வ வித்யாலயத்தின் என் எஸ் எஸ் சார்பில் சுவாமி விவேகானந்தரின் ஜெயந்தியான தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு சுயசார்பு பாரதம் மற்றும் இளைஞர் சமுதாய தலைமை என்னும் தலைப்பில் இணையதளம் வாயிலாக நடைபெற்ற தேசிய கருத்தரங்கத்தில் தலைமை ஏற்று அவர் பேசினார்.

தீன்தயால் ஷோத் சன்ஸ்தாவைச் ( Deendayal Shodh Sansthan) சேர்ந்த அபய் மஹாஜன் முக்கிய உரையாற்றினார். அவர் பேசும் போது, “புறக்கணிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் சுயசார்பு சார்பிற்கு வழிகாட்ட சுவாமி விவேகானந்தர் தன் வாழ்வையே அர்ப்பணித்தார்.

ஒரு மனிதர் தன்னிறைவு அடையாத போது அவரால் தன்னம்பிக்கையுடன் வாழ முடியாது. சுவாமி விவேகானந்தர் இளைஞர்கள் தொழில் துறையில் சிறப்பாக வரவேண்டும் என்று கனவு கண்டார். இந்த தொலைநோக்குப் பார்வையில் சுவாமி விவேகானந்தர் இன்றைய இளைஞர்களுக்கும் ஒரு உத்வேகம் தருபவராய், ஆதர்ஷ புருஷராக உள்ளார்,” என்றார்.

என் எஸ் எஸ் துறையின் ஒருங்கிணைப்பாளரும் தொலைதூரக் கல்வி துறையின் டாக்டர் கே பால்ராஜு தன்னுடைய உரையில் ஒவ்வொரு என் என் எஸ் உறுப்பினரும் சுவாமி விவேகானந்தரின் தத்துவங்களையும் பின்பற்றுவதே தலையாய கடமையாகும். சுயசார்பு இந்தியா உருவாவதற்கு இளைஞர்களின் பங்கு பெரிதும் உள்ளது என்றார்.

ப்ரொபசர் டாக்டர் ஷிவ் சிங் பகேல் தொகுப்புரையாற்றினார். டாக்டர் ஷம்பு ஜோஷி நன்றியுரையாற்றினார்.

ப்ரொபசர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், என் என் எஸ் மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் இணையதளம் வழியாக கலந்துக் கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.