india sa test - 2026

இரண்டாம் நாள்: சம நிலையில்!

விளையாட்டு உலகம் சற்றுமுன்
india sa test - 2026

இந்தியா தென் ஆப்பிரிக்கா – மூன்றாவது டெஸ்ட் – இரண்டாம் நாள் ஆட்டம்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

இன்றைய ஆட்டநேர இறுதியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டு விக்கட் இழப்பிற்கு 57 ரன் (கோலி ஆடமிழக்காமல் 15, புஜாரா ஆட்டமிழக்காமல் 9 ரன்), முதல் இன்னிங்ஸில் 223 ரன்; தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 210 ரன் (பீட்டர்சன் 72, பும்ரா 42 ரன் கொடுத்து 5 விக்கட்). இந்தியா 70 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஆட்டம் சமநிலையில் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். பும்ராவின் சிறப்பான பந்துவீச்சு; பீட்டர்சன் ஆடிய 72 ரன் நிதான ஆட்டம்; இரண்டும் இன்றைய நாளின் சிறப்புகள். இன்று ஆட்டம் தொடங்கிய இரண்டாவது பந்தில் மர்க்ராம், பும்ரா பந்தில் கிளீன்போல்ட் ஆனார்.

கிட்டத்தட்ட 12 ஓவர்கள் கழித்து கேசவ் மஹராஜ் உமேஷ் யாதவ் பந்தில் அவுட்டானார். அப்போது பீட்டர்சன் 40 பந்துகள் விளையாடி 4 ரன் எடுத்திருந்தார். உணவு இடைவேளைக்குப் பிறகு டுஸ்ஸன் 40ஆவது ஓவரில் உமேஷ் யாதவ் பந்தில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

அந்த சமயத்தில் பீட்டர்சன் 100 பந்துகள் விளையாடி 48 ரன் எடுத்திருந்தார். 56ஆவது ஓவரில் முகம்மது ஷமி இரண்டு விக்கட் (பவுமா & கைல் வெரியென்னே) எடுத்தார். அதன் பின்னர் 63ஆவது ஓவரில் பும்ரா ஏழாவது விக்கட்டைச் சாய்த்தார். 65ஆவது ஓவரில் பீட்டர்சன் பும்ரா பந்துவீச்சில் அவுட்டானார். 249 நிமிடங்கள் விளையாடி, 166 பந்துகளைச் சந்தித்து, 72 ரன் எடுத்திருந்தார் பீட்டர்சன்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

அடுத்த இரண்டு விக்கட்டுகளையும் பும்ரா 77ஆவது ஓவருக்குள் எடுத்து முடித்திருந்தார். முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 77.3 ஓவரில் 223 ரன் எடுத்திருந்தது. இன்று, இரண்டாம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 76.3 ஓவரில் 210 ரன் எடுத்துள்ளது. இந்தியாவின் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய ராகுலும் அகர்வாலும் முதல் ஆறு ஓவருக்குள் அவுட்டாயினர்.

கோலியும் புஜாராவும் அடுத்த 11 ஓவர்களை ஆடி இந்திய அணியின் ஸ்கோரை இரண்டு விக்கட் இழப்பிற்கு 57 ரன் என்ற அளவிற்கு உயர்த்தியுள்ளனர்.

இந்தியா நிச்சய வெற்றி பெறவேண்டுமானால் நாளை மூன்றாவது நாள் முழுவதும், நான்காவது நாளில் பாதி நாளும் ஆடவேண்டும். 400 ரன்கள் வெற்றிக்கு இலக்காக வைக்க வேண்டும்.

அதற்கு நாளை புஜாரா, கோலி, ரஹானே, ரிஷப் பந்த் ஆகிய நால்வரும் நன்றாக ஆடி தலா 70 ரன் எடுக்க வேண்டும். அப்படி நடந்தால் வெற்றி நிச்சயம். இது வீர சத்தியம்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.