
செங்கோட்டையில் தென்பொதிகை நிலத் தரகர்கள் நலச்சங்க சிறப்பு ஆலோசனை மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடந்தது.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை வர்த்தக சங்க கட்டிடத்தில் வைத்து இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலபர்ஸ் தெற்கு மண்டலம் தென்பொதிகை நிலத்தரகர்கள் நலச்சங்கம் சார்பில் சிறப்பு ஆலோசனை மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு அகில இந்திய தலைவர் டாக்டர் விருகை வி.என். கண்ணன் தலைமை தாங்கி புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட தென்காசி மாவட்ட புதிய நிர்வாகிகளுக்கு நியமன ஆணைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
இந்த விழாவில் தென்காசி மாவட்ட தலைவர் பீட்ஸ் ஷேக் முகம்மது, மாவட்ட செயலாளர் திருமால், மாவட்ட பொருளாளர் ராஜு, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் பாபுராஜன் சட்ட ஆலோசகர் கார்த்திகை செல்வன், மாவட்ட துணை செயலாளர் திருமலைக்குமார், நகர தலைவர் கண்ணன், நகர இளைஞரணி செயலாளர் பாண்டி, பேரூர் கழக செயலாளர் ராஜேந்திரன், கடையநல்லூர் தொகுதி தலைவர் பொய்கை முருகன், இடைகால் பஞ்சாயத்து தலைவர் குசலவன், நிர்வாகிகள் சுடலைமுத்து, ராஜு, கணேசன், வாஞ்சிநாதன் மற்றும் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.